கழிவறையில் செல்ஃபோன் பயன்படுத்தினால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இளைஞர்களே உஷார்..! - Agri Info

Adding Green to your Life

February 1, 2024

கழிவறையில் செல்ஃபோன் பயன்படுத்தினால் இவ்வளவு ஆபத்து இருக்கா..? இளைஞர்களே உஷார்..!

 கழிவறை என்பது பொது சுகாதாரத்தில் முதன்மையானதாக இருக்கிறது. மனித இனத்தின் நாகரீக வளர்ச்சியில் கழிவறை பெரும் இடத்தை பெற்றுள்ளது. நகரங்கள் வளர்ச்சி காலத்தில் வீட்டிற்கு ஒரு கழிவறை என்று வெளியில் கட்டப்பட்டு வந்தது. அதே தற்போதைய தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் சுகாதார வளர்ச்சியில் ஒரு வீட்டிற்கு உள்ளேயே இரண்டு கழிவறை வரை கட்டிக்கொள்கின்றனர். கழிவறை சுகாதாரத்திற்கான ஆராய்ச்சிகளும், விழிப்புணர்வுகளும் அதிகரித்துகொண்டு செல்கின்றனர். இருப்பினும் வளர்ச்சியுடன் சில துரிதமான பழக்கங்களும் ஒட்டிக்கொள்கின்றன.

அதில் ஒன்றுதான் கழிவறையில் செல்போன் உபயோகிப்பது. கழிவறைக்கு செல்லும்போது செல்போனை எடுத்து செல்வது எனும் ஒரு புதிய பழக்கம் இளைஞர்கள் இடையே நிலவி வருகிறது. இளைஞர்கள் பெரும்பாலும் கழிவறையில் செல்போனை வைத்திருக்க விரும்புகின்றனர் என சில ஆய்வுகள் சுட்டிக்காட்டுக்கின்றன. காலைக் கடனை கழிக்கும்போது, செல்போனை கையில் வைத்திருப்பது பாக்ட்டீரியாவுக்கு தீனியாக அமையும். ஒரு தொலைபேசியின் திரையானது, ஒரு பொது கழிப்பறை இருக்கையை விட அழுக்காக இருக்கும் என ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

2022இல் சில விஞ்ஞானிகள் ‘டாய்லெட் ப்ளூம்’ பற்றி குறிப்பிட்டுள்ளனர். அதாவது, ஒருவர் ஃபிளஷ் செய்யும்போது, கழிவறையில் இருக்கும் கண்ணுக்கு தெரியாத கிருமிகளின் கூடாரம் வெடித்து துளிகள் மற்றும் துகள்களாக சிதறும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இன்னும் தெளிவாக கூறவேண்டும் என்றால், ஒருவர் ஃபிளஷ் செய்யும்போது கழிவறையில், ஒரு டூத் பிரஷ் இருந்தால், மலத்தின் துகள்கள் அதனுள் ஒட்டிக்கொள்ளும் என்று கூறப்படுகிறது.

News18

சான் பிரான்சிஸ்கோவில் உள்ள இரைப்பை குடல் மருத்துவ நிபுணர் டாக்டர் சௌரப் சேத்தி, ஒரு செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், கழிவறையில் செல்போன் பயன்படுத்துவதன் மூலம் நீங்கள் கழிப்பறையில் செலவிடும் நேரம் அதிகரிக்கிறது என்று கூறியுள்ளார். மேலும், அதன் காரணமாக உங்கள் மலக்குடல் மற்றும் ஆசனவாயில் அழுத்தத்திற்கு வழிவகுக்கிறது என்று கூறப்படுகிறது. இது குத பிளவுகள் மற்றும் மலக்குடல் வீழ்ச்சிக்கு கூட வழிவகுக்கும் என அவர் கூறியுள்ளார்.

கழிப்பறை என்பது கிருமிகள் இனப்பெருக்கம் செய்யும் இடம் என கூறப்படுகிறது. நாம் கழிப்பறை இருக்கையில் இருந்துக்கொண்டு செல்போனை ஸ்க்ரோல் செய்யும்போது, ​​நம் கைகளில் கிருமிகள் ஒற்றிக்கொள்ளும். அப்படியே கைகளை நம் வாய், கண்கள் மற்றும் மூக்கில் வைத்தால் அது பல அபாயங்களை உருவாகும்.

News18

ஒரு செல்போனின் திரையில் கிருமிகள், 28 நாட்கள் வாழலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றன. ஸ்மார்ட்போன்கள் கழிப்பறை இருக்கைகளை விட பத்து மடங்கு அதிகமான கிருமிகளை கொண்டவை என்பது உறுதிசெய்யப்பட்ட உண்மையாகும். மேலும், சுகாதாரக் கண்ணோட்டத்தில், செல்போன் திரைகள் ‘டிஜிட்டல் யுகத்தின் கொசு’ என்றும், தொற்று நோய்களின் வாகனமாக இருக்கிறது என்றும் தொற்று கட்டுப்பாட்டு நிபுணர் டாக்டர் ஹக் ஹைடன் கூறியுள்ளார்.

கழிப்பறை இருக்கையில் பொதுவாகக் காணப்படும் கிருமிகள் ஸ்டேஃபிலோகோகஸ் ஆரியஸ் ஆகும். இவை பெரும்பாலும் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளை ஏற்படுத்துகின்றன. இக்கிருமிகளால் ஒருவர் வயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் தொற்று நோய்களுக்கு ஆளாகக்கூடும். மேலும், இது சரும பிரச்னைகளை உருவாகும் என்றும் கூறப்படுகிறது.

கழிப்பறையை பயன்படுத்திய பிறகு நாம் அனைவரும் கை கழுவதைப் பின்பற்றுகிறோம், ஆனால் நம்மில் பலர் செல்போனை சுத்தப்படுத்துவதை தவிர்க்கிறோம். செல்போனை தினசரி ஒரு துணியால் சுத்தம் செய்யவேண்டும். செல்போனை கழிப்பறையில் பயன்படுத்துவது உங்களுக்கு தீங்கு விளைவிக்கும் என்று தெரிந்துகொண்டு, இந்த பழக்கத்தில் இருந்து விடுப்பெறுங்கள்.

🔻 🔻 🔻 

No comments:

Post a Comment