ரயில்வே துறையில் எளிதில் வேலை வேண்டுமா?? இதை படியுங்கள் - Agri Info

Adding Green to your Life

February 8, 2024

ரயில்வே துறையில் எளிதில் வேலை வேண்டுமா?? இதை படியுங்கள்

 மயிலாடுதுறையில் கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி.

மத்திய அரசின் ரயில்வே துறையில் வேலைவாய்ப்பு மயிலாடுதுறை மாவட்டத்தில் கட்டணமில்லா வழிகாட்டுதல் நிகழ்ச்சி வருகின்ற பிப்ரவரி 08_ஆம் தேதி நடைபெறுவதாக கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.
இதை பற்றி அவர் கூறும்போது மத்திய அரசின் ரயில்வே துறையில் காலியாக உள்ள தென்னக ரயில்வேயில் 148 பணியிடங்கள் உட்பட 5696 அசிஸ்டன்ட் லோகோ பைலட் பணி காலியிடங்கள்களை நிரப்ப ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் விளம்பர அறிவிப்பை வெளியிட்டுள்ளது.இதற்கு இணைவழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் வருகின்ற பிப்ரவரி 19 _ஆம் தேதி கடைசி நாள்.
வயது வரம்பு 18 முதல் 30 வரை இருக்க வேண்டும்.மேலும் ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் ,எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் உட்சபட்ச வயது வரம்பில் தளர்வுகள் உண்டு .
தேர்விற்கு விண்ணப்பிக்க கட்டணம் ரூ.500 ஆகும் .எஸ்.சி,எஸ்.டி பிரிவினர் முன்னால் படைவீரர்கள், மாற்றுதிறனாளிகள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் ரூ 230 ஆகும் .
எழுத்து தேர்வானது சென்னை, திருச்சி, மதுரை ,கோவை , புதுச்சேரி ஆகிய ஊர்களில் நடைபெற உள்ளது.விண்ணபிக்க தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 299790 ஆகிய அலுவலக எண்ணையோ,9499055904 என்ற வாட்ஸ் ஆப் எண்ணையோ தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment