உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி அவர்கள் மாநில தகவல் ஆணையர் பதவி இடங்கள் குறித்த முழு விவரங்களையும் தெரிவித்துள்ளார்.
மாநில தகவல் ஆணையர்:
உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி கேபிகே வாசுகி அவர்களின் தலைமையில் மாநில தகவல் ஆணையர் தெரிவுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலமாக மாநில தகவல் ஆணையத்துக்கான புதிதாக இரண்டு பணியிடங்கள் நிரப்பம் செய்யப்படவுள்ளது. இது குறித்து உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி வாசுகி அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் சட்டம், அறிவியல், தொழில்நுட்பம், சமூக சேவை, மேலாண்மை, இயலியல், வெகுஜன ஓடம், ஆட்சி பணி போன்ற துறைகளில் அனுபவமும் புலமையும் கொண்ட நபர்கள் தகவல் ஆணையர் பதவி இடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். குறிப்பாக நாடாளுமன்ற, சட்டப்பேரவை உறுப்பினர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க முடியாது.
தேர்வு செய்யப்படும் உறுப்பினர்கள் பணியில் மூன்று ஆண்டுகள் அல்லது 65 வயது எட்டும் வரை இவற்றில் எது முன்னர் உள்ளதோ அந்த காலம் வரை பதவியில் இருக்கலாம். மாநில தகவல் ஆணையர் பதவிக்கு விண்ணப்பிக்கும் ஆர்வம் உள்ளவர்கள் இதற்கான விண்ணப்பத்தை பிப்ரவரி 29ஆம் தேதி மாலை 5 மணிக்குள் நீதிபதி கே பி கே வாசுகி, தலைவர், தெரிவுக் குழு, இரண்டாம் தளம், கத்தோலி மையம், ஆர்மீனியன் தெரு, பாரிமுனை, சென்னை 600001. என்ற முகவரியில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். இதற்காக வழங்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலமாகவும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
No comments:
Post a Comment