Search

தொழிற்பழகுநர் பயிற்சி பெற வேண்டுமா ?? விவரம் இதோ.

 புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு / தனியார் தொழில் பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ/ மாணவிகளுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான சேர்க்கை முகாம் உள்ள தொழிற்பயிற்சி நிலையத்தில் நடைபெற உள்ளது.

எனவே இந்த முகாமில் அரசு மற்றும் தனியார் துறையைச் சார்ந்த பல நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழிற் பழகுநர்களை தேர்வு செய்ய உள்ளனர். மேலும் 10, 12, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களும் கலந்து கொண்டு தொழிற்பழகுநராக சேர்ந்து கொள்ளலாம்.இதில் கலந்து கொள்ள உள்ள மாணவ / மாணவியர்கள் தங்களது அசல் கல்விச் சான்றிதழ்களை கொண்டு வர வேண்டும்.

தொழிற் பழகுநராக தேர்வு செய்யப்படும் மாணவ / மாணவியர்களுக்கு மாதந்தோறும் ரூ.7,000/- முதல் ரூ.13,000/- வரை உதவித் தொகை வழங்கப்படும். தொழிற் பழகுநர் பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழும் வழங்கப்படும்.என்று புதுக்கோட்டை மாவட்ட ஆட்சித்தலைவர் மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.

🔻🔻🔻

0 Comments:

Post a Comment