Search

அன்னாசி பழத்தில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்.. டயட்டில் சேர்க்க மிஸ் பண்ணிடாதீங்க..!

 பொதுவாக பழங்கள் நமக்கு பல ஆரோக்கியமான நன்மைகளை வழங்குவதால், சமச்சீரான டயட்டில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றன. பெரும்பாலும் ஆண்டு முழுவதும் கிடைக்கும் மலிவான மற்றும் சத்தான பழங்கள் உள்ளூர் மார்கெட்டில் ஏராளமாக இருக்கின்றன.

இதில் முக்கியமான ஒரு பழமாக இருக்கிறது அன்னாசிப்பழம். இந்த பழங்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் பிற சேர்மங்கள் உள்ளன. அன்னாசிப்பழங்களும் அதிலிருக்கும் கலவைகளும் செரிமான ஆரோக்கியத்தை சிறப்பாக வைப்பது, நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்குவது மற்றும் காயங்களில் இருந்து மீள்வது உள்ளிட்ட பல ஆரோக்கிய நன்மைகளுடன் தொடர்புடையதாக இருக்கிறது.

அன்னாசிப்பழங்களில் வைட்டமின் சி நிரம்பியுள்ளது. இது நம்முடைய நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் சரும ஆரோக்கியத்தை சிறப்பாக வைக்க உதவுகிறது.


அன்னாசியில் உள்ள ப்ரோமிலைன் (bromelain) போன்ற நொதிகள் செரிமானத்திற்கு உதவுகின்றன மற்றும் அழற்சியை குறைக்க உதவுகிறது. ஏனென்றால் அன்னாசியில் உள்ள ப்ரோமெலைன் அழற்சி எதிர்ப்பு அதாவது ஆன்டி-இன்ஃபளமேட்ரி பண்புகளை கொண்டுள்ளது.


அன்னாசியில் நிறைந்திருக்கும் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி கண்பார்வையை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது.

அன்னாசிப்பழங்களில் மாங்கனீஸ் நிறைந்து காணப்படுகிறது. இது எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கவும், எலும்பு சார்ந்த குறைபாடுகளை சரிசெய்யவும் உதவுகிறது. தோராயமாக 165 கிராம் சிங்கிள் கப் அன்னாசி பழத்தில் பரிந்துரைக்கப்பட்ட தினசரி மதிப்பில் 76% மாங்கனீஸ் உள்ளது.

அன்னாசி பழங்களில் கொழுப்பு மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருக்கிறது. எனவே இந்த பழங்கள் நம்முடைய இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. தவிர இந்தச பழங்களில் காணப்படும் அதிக நார்ச்சத்து, பொட்டாசியம் மற்றும் வைட்டமின் சி உள்ளிட்டவையும் கூட இதய ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும். இந்த சத்துக்கள் இதயம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்பட முக்கிய காரணமாக இருக்கும் கொலஸ்ட்ரால் லெவல் மற்றும் ரத்த அழுத்தத்தை பராமரிக்கவும் உதவுகின்றன.

அன்னாசி பழங்களில் நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நம்முடைய உடலை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது.

அன்னாசி பழங்களில் கலோரிகள் குறைவாகவும், நார்ச்சத்து அதிகமாகவும் இருக்கிறது. எனவே இந்த பழம் தங்களது எடையைக் கட்டுப்படுத்த நினைப்போருக்கு ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. உங்கள் பசியை கட்டுப்படுத்தவும், அதிகப்படியான உணவுகள் எடுத்து கொள்வதை தவிர்க்கவும் உதவுகிறது.

அன்னாசி பழங்களில் அதிக அளவு வைட்டமின் சி, சக்திவாய்ந்த ஆன்டி-ஆக்ஸிடன்ட்ஸ் மற்றும் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், கேன்சரை உண்டாக்கும் ஃப்ரீ ரேடிக்கஸ்ல்களின் உற்பத்தியைத் தடுக்க இது உதவ கூடும் என்கிறார்கள் நிபுணர்கள்.



🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment