தமிழக அரசுப் பள்ளிகளில் காலி பணியிடங்கள் – கல்வித்துறை முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர் நியமனத்திற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
கல்வித்துறை உத்தரவு
தமிழகத்தில் தொடக்கக்கல்வித்துறையின் கீழ் இயங்கும் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களில் ஆசிரியர்களை நியமிக்கும் போது பின்பற்ற வேண்டிய வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.பிப்.7 ஆம் தேதி தொடக்க கல்வி இயக்குநர், அரசுக்கு தொடக்க கல்வி இயக்ககத்தின் கீழ் பள்ளிகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பும் போது பின்பற்ற வேண்டிய கால அட்டவணை வெளியிட வேண்டும் என கடிதம் எழுதினர். தற்போது கால அட்டவணை வெளியாகி இருக்கிறது.அதில், இடைநிலை ஆசிரியர் உபரி பணியிடங்களை கண்டறிந்து கணக்கீடு செய்தல் பணி மே 1ம் தேதி உபரி இடைநிலை ஆசிரியர்களை தேவையுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் செய்தல் மே 31, அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கவுன்சலிங் ஜூன் 30ம் தேதி நடத்த வேண்டும். அதே போல் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிட மதிப்பீடுகள் ஜூலை 1ம் தேதி , காலிப்பணியிடங்கள் நிரப்பக் கோரும் கருத்துருக்கள் இருந்தால் அதை ஜூலை 15க்குள் அரசுக்கு அனுப்ப வேண்டும். நேரடி நியமனம் செய்யப்படும் உத்தேச பணியிடங்களின் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு அக்டோபர் 31க்குள், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் ஜனவரி 31க்குள் தேர்வு நடத்த வேண்டும். மேலும் தேர்வு முடிவுகள் ஏப்ரல் 30க்குள் வெளியிட வேண்டும், சான்று சரிபார்ப்பு மே 1ம் தேதி தொடங்கி மே 31க்குள் முடிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
Click here to join Group4 whatsapp group
No comments:
Post a Comment