ready-to-eat meals : ரெடி-டு-ஈட் எனப்படும் உணவுகள் நமது அவசரத்த்துக்கு உதவியானதாக இருக்கலாம், ஆனால் ஆரோக்கியமானதாக இருக்காது. அவசரத்திற்கு ஏற்ற உணவுகள் நமக்கு வசதியானவை, ஆனால் வீட்டில் தயாரிக்கப்படும் உணவுகளின் பக்கத்தில் கூட அவை நெருங்கமுடியாது. ஆரோக்கியமற்ற ஆயத்த உணவுகளை முற்றிலுமாக ஒதுக்கிவிட முடியுமா என்பது சந்தேகமாக இருந்தாலும், அவற்றை கைவிட வேண்டிய நேரம் இது. ஏனென்றால் ஆரோக்கியம் தான் நமது வாழ்க்கைக்கு ஆணிவேர்....
ரெடி டு ஈட் டால் - உடனடியாக உண்ணக்கூடிய பதப்படுத்தப்பட்ட உணவுகள்
உடனடியாக உண்ணக்கூடிய உணவுகள் என்றால், பழங்கள் காய்கனிகள் மட்டும் என்று இருந்த நிலை இன்று மாறிவிட்டது. ஒரு காலத்தில் வீட்டில் செய்யும் தின்பண்டங்கள் மற்றும், புளிசாதம், சப்பாத்தி போன்றவை தான் தயாரித்து வைத்து பிறகு பயன்படுத்தக்கூடிய உணவுகளாக இருந்தன. அதுவும் மாதக்கணக்கில் அல்ல, நாள் கணக்கில் தான் அவை பயன்படுத்தப்படும். கருவாடு, ஊறுகாய், வத்தல் வடாம், அப்பளம் என மிகவும் சில பொருட்கள் மட்டும் தான் நீண்ட நாட்கள் சேமித்து வைத்து பயன்படுத்தப்பட்ட பொருட்களாக இருந்தன.
பதப்படுத்த பயன்படும் இரசாயனங்கள்
அதிலும், இவற்றிலும் பதப்படுத்துவதற்கு எந்தவித ரசாயனமும் உபயோகப்படுத்தப்படாது என்பதால் அவை உடலுக்கு கேடு விளைவிக்கவில்லை. ஆனால், இன்று நிலைமை மாறிவிட்டது. சிக்கன் பிரியாணி, இறால், மட்டன் என அனைத்துவிதமான பொருட்களுமே உடனடியாக உண்ணக்கூடிய பொருட்களாக தயார் நிலையில் கிடைக்கின்றன.
ஊட்டச்சத்துக்கள்
ஆனால் ரெடிமேட் உணவுகள் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களையும் தருகிறதா? ஆயத்த உணவுகளைத் தவிர்ப்பது ஏன் ஆரோக்கியமான விஷயம் என்பதை தெரிந்துக் கொண்டால், உடல் ஆரோக்கியத்தை பாதுகாக்கலாம்.
ஆயத்த உணவுகள்
சாப்பிட தயாராக இருக்கக்கூடிய உணவுகள், பெரும்பாலும் நமது வசதிக்காக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுகள் ஆகும். இவை முழுமையாக சமைக்கப்பட்டு, விரைவாகவும் எளிதாகவும் நுகர்வதற்காக பேக்கேஜ் செய்யப்பட்ட உணவுப் பொருட்களாகும். பதப்படுத்தப்பட்ட உணவுகள், சூப்கள், மைக்ரோவேவ் உணவுகள் மற்றும் சாலடுகள் என பல்வேறு வடிவங்களில் ’ரெடி டு ஈட்’ உணவுகள் சந்தையில் கிடைக்கின்றன.
ஆயத்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்கான காரணங்கள்
பதப்படுத்தப்பட்ட உணவுகள் அவற்றின் ஊட்டச்சத்துகளின் அடிப்படையில் மாறுபடும். அவற்றில் சில ஒப்பீட்டளவில் ஆரோக்கியமாகவும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களையும் வழங்க முடியும், ஆனால் பெரும்பாலனவற்றில் சர்க்கரைகள், நிறைவுற்ற கொழுப்புகள் மற்றும் சோடியம் போன்ற ஆரோக்கியமற்ற பொருட்கள் அதிகமாக இருக்கலாம்.
இந்த தயாரிப்புகளின் ஊட்டச்சத்து தரத்தைக் கண்டறிய ஊட்டச்சத்து லேபிள்கள் மற்றும் மூலப்பொருள் பட்டியல்களைப் படிப்பது அவசியம். பதப்படுத்தப்பட்ட சிக்கன் உங்களுக்கு புரதத்தைக் கொடுக்கலாம் அல்லது சோளம் அல்லது பட்டாணி சிறிது ஆரோக்கியமானதாக இருக்கலாம். ஆனால் உண்ணத் தயாராக இருக்கும் அனைத்து உணவுகளிலும் உங்கள் உடலுக்குத் தேவையான அனைத்து ஊட்டச்சத்துக்களும் இல்லை என்பதையும் அவை ரசாயனங்கள் சேர்த்து பதப்படுத்தப்படவை என்பதையும் மனதி வைத்துக் கொள்ளுங்கள்.
No comments:
Post a Comment