தமிழகத்தின் பெரம்பலூர் மாவட்டத்தில் வருகின்ற பிப்ரவரி மாதம் 10ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாம் குறித்த தகவல்கள் அனைத்தும் அனைவருக்கும் எளிதில் புரியுமாறு கீழே தரப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
வேலையில்லாமல் தவித்துக் கொண்டு இருக்கும் இளைஞர்களின் வாட்டத்தை போக்க தமிழக அரசால் அவ்வப்போது வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில் பெரம்பலூர் மாவட்ட ரோவர் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10ம் தேதி மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறவுள்ளது. இதனை பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் ரோவர் கல்வி நிர்வாகம் சேர்ந்து நடத்த திட்டமிட்டுள்ளார்கள்.
இம்முகாமில் 08ம் வகுப்பு முதல் டிகிரி முடித்தவர்கள் வரை கலந்து கொண்டு பயன் அடையலாம். இந்த முகாமில் பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த MRF நிறுவனம் உட்பட பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 100-க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களில் காலியாக 5000-க்கும் மேற்பட்ட பணியிடங்களை நிரப்ப உள்ளனர். மேலும் இம்முகாமில் வெளிநாட்டு நிறுவனங்கள், சுயதொழில் செய்வது, அரசு கடனுதவி பெறுவது போன்றவை பற்றியும் கலந்துரையாடப்பட உள்ளது.
இந்த முகாமில் கலந்து கொள்ள ஆவலுடன் உள்ள நபர்கள் தங்களது ஆதார் அட்டை, சுயவிவர பட்டியல் (CV), தேவையான சான்றிதழ்களின் நகலுடன் 10.09.2024 அன்று காலை 9.00 மணிக்கு முதல் மதியம் 3.00 மணி வரை ரோவர் மேல்நிலைப்பள்ளி மைய வளாகம், பெரம்பலூர் என்ற முகவரியில் நடைபெறவுள்ள முகாமில் கலந்து கொள்ளலாம். மேலும் https://www.tnprivatejobs.tn.gov.in/ என்ற இணைப்பின் மூலம் தங்களது விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது. இந்த முகாமில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் தங்களது ஆதார் அட்டை., பான் கார்டு, GST எண்ணுடன் இம்முகாமில் கலந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவலை 9499055913 என்ற எண்ணை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment