மாதம் ரூ.43,000/- ஊதியத்தில் ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்கலாம் வாங்க!
நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் திண்டுக்கல் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆனது சமீபத்தில் வெளியானது. இந்த பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
ஆவின் நிறுவன வேலைவாய்ப்பு விவரங்கள்:
- நடமாடும் கால்நடை மருத்துவ ஆலோசகர் பதவிக்கு என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc.,& AH முடித்திருக்க வேண்டும். இத்துடன், நான்கு சக்கர அல்லது இரு சக்கர வாகனத்திற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
- விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது அதிகபட்சம் 50 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
- தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.43,000/- சம்பளம் வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் 13.02.2024 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
No comments:
Post a Comment