தென்காசி இளைஞர்களுக்கான நற்செய்தி..!! சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!! - Agri Info

Education News, Employment News in tamil

February 15, 2024

தென்காசி இளைஞர்களுக்கான நற்செய்தி..!! சனிக்கிழமை மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்..!!

 தென்காசியில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஸ்ரீ ராம் நல்லமணி யாதவா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, கொடிக்குறிச்சியில் 17.02.2024 அன்று காலை 9.00 மணி முதல் 2 .00 மணி வரை நடத்தப்படவுள்ளது. இதில் தென்காசி மாவட்டம் மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் 100- க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களும் மற்றும் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தினால் அங்கீகரிக்கப்பட்ட திறன்பயிற்சி நிறுவனங்களும் பங்கேற்க உள்ளனர். இந்த மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமில் 8- வகுப்பு முதல் முதுகலை பட்டதாரி வரை (B.E, Diploma, Nursing, ITI( படித்தவர்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறலாம்.

இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பமுள்ள வேலைநாடுநர்கள் www.tnprivate jobs.tn.gov.in என்ற தனியார் துறை வேலை வாய்ப்பு இணையதளத்தில் தங்களது சுய விவரங்களை பதிவு செய்து கொள்ளவும். மேலும் இம்முகாம் தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய TENKASI EMPLOYMENT OFFICE என்ற Telegram channelல் இணையவும். உங்கள் அலைபேசியில் Telegram செயலியை பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்பு TENKASI EMPLOYMENT OFFICE என search செய்தால் எங்கள் அலுவலக Channel தோன்றும். அதன் உள் நுழைந்து Join என்பதனை click செய்து எளிதில் Channel-ல் இணையலாம் என அறிவிக்கப் பட்டுள்ளது.

🔻🔻🔻



🔻🔻🔻

No comments:

Post a Comment