அக்னிவீர் திட்டத்தின்கீழ் ராணுவ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு - Agri Info

Education News, Employment News in tamil

February 19, 2024

அக்னிவீர் திட்டத்தின்கீழ் ராணுவ பணிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

 சென்னை: அக்னிவீர் திட்டத்தின்கீழ், இந்திய ராணுவத்தில் பல்வேறு பணிகளுக்கு தகுதிவாய்ந்த விண்ணப்ப தாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின்கீழ், அலுவலக உதவியாளர், ஸ்டோர் கீப்பர், டிரேட்ஸ்மேன், பொதுப் பணி, செவிலியர் உதவியாளர், மருந்தாளுநர், பெண்ராணுவ போலீஸார், ஆசிரியர்கள் உள்ளிட்ட பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மற்றும் பாண்டிச்சேரி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த தகுதிவாய்ந்த ஆண், பெண் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம். www.joinindianarmy.nic.in என்ற இணையதளம் வாயிலாக ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி வரும் ஏப்.22. கூடுதல் தகவல்களுக்கு சென்னையில் உள்ள ராணுவ தேர்வு அலுவலகத்தை 044-25674924 என்ற தொலைபேசி எ்ண்ணில் தொடர்பு கொண்டு அறியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


🔻🔻🔻

No comments:

Post a Comment