விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய டெக்னீசியன் தேவை என்று தகவல் வெளியாகியுள்ளது.
விருதுநகரில் செயல்பட்டு வந்த மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்ட பின்னர் , மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை அருப்புக்கோட்டைக்கு மாற்றப்பட்டு அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனை தற்போது விருதுநகர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற டெக்னீசியன் தேவை என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆறு மாத காலத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்ற ரேடியோகிராபி பயின்ற டெக்னீசியன் தேவை என்றும் விருப்பமுள்ளவர்கள் உரிய கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் மருத்துவமனைக்கு வந்து தலைமை மருத்துவரை சந்திக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தப் பணி முற்றிலும் தற்காலிகமானது என்று கூறப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment