Search

வெயிட்லாஸ் பண்ண ட்ரை பண்றீங்களா..? உங்க வயதுக்கு ஏற்ப தினமும் எத்தனை ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் தெரியுமா?

 பலரும் தங்கள் உடல் எடையை குறைக்க டயட் அல்லது ஒர்கவுட்ஸ்களில் கவனம் செலுத்துகிறார்கள். அந்த வகையில் உடல் பருமனாக இருப்பவர்கள் தினமும் உடற்பயிற்சி மற்றும் நடைப்பயிற்சி செய்வதன் மூலம் உடல் பருமனை குறைக்க முயற்சிக்கிறார்கள்.

அதிகரித்து காணப்படும் உடல் எடையை குறைப்பதில் நடைப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. தினசரி 10,000 ஸ்டெப்ஸ் அதாவது பத்தாயிரம் அடிகள் நடப்பது எடையை குறைப்பதற்கு பெரிதும் உதவும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். எனவே எடையை குறைக்க விரும்பும் பலரும் தினசரி 10,000 ஸ்டெப்ஸ் என்ற எளிய பயிற்சியை செய்ய தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால் வயதுக்கு ஏற்ப தினமும் இத்தனை ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியுமா? ஆம், சுகாதார நிபுணர்களின் கூற்றுப்படி, தினசரி நடக்க வேண்டிய ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கை வயதுக்கு ஏற்ப மாறுபடுகிறது. இது குறித்து இங்கே விரிவாக பார்க்கலாம்.

அமெரிக்கன் கவுன்சில் ஆஃப் எக்சர்சைஸ் படி, தினசரி 2500 ஸ்டெப்ஸ்கள் வரை நடப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும். அதேநேரம் பல ஆராய்ச்சிகள் தினமும் குறைந்தது 10 ஆயிரம் ஸ்டெப்ஸ் நடக்க வேண்டும் என்று பரிந்துரைக்கின்றன. எனினும் சில சுகாதார நிபுணர்கள் தினமும் குறைந்தது 5 ஸ்டெப்ஸ்களாவது நடக்க அறிவுறுத்துகிறார்கள்.

News18

வயதுக்கு ஏற்ப தினசரி எத்தனை ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும்…!

  • ஒரு ஆய்வின் படி, 40 வயதுக்கு மேற்பட்ட பெண்கள் தினசரி 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்களுக்கு மேல் நடக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.

  • 18 முதல் 50 வயது ஆண்கள் தினமும் 10 - 12 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் வரை நடக்க வேண்டும்.

  • 50 வயதுக்கு மேற்பட்ட ஆண்கள் தினமும் 10-11 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் வரை நடக்க வேண்டும்.

  • 40 வயதுக்குட்பட்ட பெண்கள் தினமும் 12 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடப்பது நல்லது.

  • 40 முதல் 50 வயதுடைய பெண்கள் தினமும் 11 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும்.

  • 50 முதல் 60 வயதுடைய பெண்கள் தினமும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும்.

  • 60 வயதிற்கு மேற்பட்டபெண்கள் தினமும் 8 ஆயிரம் ஸ்டெப்ஸ்களுக்கு மேல் நடக்க வேண்டும்.

இதனிடையே பிரபல endocrinologist நிபுணர் டாக்டர் சஞ்சய் கல்ரா பேசுகையில் வயதை பொருட்படுத்தால்மல் ஒவ்வொரு நபரும் தினசரி குறைந்தது 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டும் என்கிறார். இதனால் நம்முடைய இதய ஆரோக்கியம் நன்றாக இருக்கும். மேலும் நீரிழிவு, இதய நோய், பக்கவாதம், உடல் பருமன், மனச்சோர்வு, மார்பக-பெருங்குடல் புற்றுநோய் போன்ற வாழ்க்கை முறை தொடர்பான நோய்களின் அபாயமும் குறையும் என குறிப்பிட்டுள்ளார்.

அதிக எடையுடன் இருக்கும் ஒருவர் தனது உடல் எடையை கணிசமாக குறைக்க விரும்பினால், அவர் தனது தினசரி நடக்கும் ஸ்டெப்ஸ்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் கூறுகிறார். நடைபயிற்சியுடன் உடல் உறுப்புகளில் சேர்ந்திருக்கும் கொழுப்பிற்கு ஏற்ப சில உடற்பயிற்சிகளையும் செய்ய வேண்டியிருக்கும். நீரிழிவால் பாதிக்கப்பட்ட அல்லது ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும் ஒருவர் தினமும் 12 ஆயிரம் ஸ்டெப்ஸ்களுக்கு மேல் நடக்க வேண்டும்.

ஒரு நபர் தினமும் 4 முதல் 5 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் நடப்பதன் மூலம் ஆரோக்கியமாக இருக்க முடியும் என்றாலும் 10 ஆயிரம் ஸ்டெப்ஸ்கள் வரை நடந்தால் எந்த பாதிப்புகளும் என ஆராய்ச்சிகள் கூறுகின்றன. இருப்பினும் இந்த 10,000 ஸ்டெப்ஸ் விதி குழந்தைகளுக்கானது அல்ல. குழந்தைகள் தினசரி குறிப்பிட்ட ஸ்டெப்ஸ்கள் நடக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் தினமும் குறைந்தது ஒன்றரை மணி நேரமாவது தங்கு தடையின்றி விளையாடுவது அவசியம்.

🔻 🔻 🔻 

0 Comments:

Post a Comment