வேலை தேடுபவரா நீங்கள்...! அப்ப இங்க போங்க..! விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்...! - Agri Info

Adding Green to your Life

February 9, 2024

வேலை தேடுபவரா நீங்கள்...! அப்ப இங்க போங்க..! விருதுநகர் மாவட்ட நிர்வாகம் நடத்தும் வேலை வாய்ப்பு முகாம்...!

 விருதுநகர் மாவட்டத்தில் வேலை வாய்ப்பு முகாம் நாளை பிப்ரவரி 10 ஆம் தேதி நடைபெறுகிறது.

விருதுநகர் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் மாதம் தோறும் வேலை தேடும் இளைஞர்களுக்காக மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடத்தி வருகிறது. அந்த வகையில் பிப்ரவரி மாதத்திற்கான வேலை வாய்ப்பு முகாம் வரும் பிப்ரவரி 10 ம் தேதி சாத்தூர் SRNM கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காலை 9 மணி முதல் 3 மணி வரை நடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற் சொன்ன தேதியில் நேர்முக தேர்வுக்கு பல துறைகளை சேர்ந்த 100 க்கும் அதிகமான தனியார் நிறுவனங்கள் வர இருப்பதாகவும், வேலை தேடும் இளைஞர்கள் நேரில் வந்து நேர்முக தேர்வில் பங்கு பெற்று பயன்பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த நேர்முக தேர்வில் வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகை பெறும் விண்ணப்பம், போட்டித்தேர்வு இலவச பயிற்சிக்கான விண்ணப்பம் மற்றும் அயல்நாட்டு வேலைவாய்ப்பு பதிவுக்கான வழிகாட்டுதல் போன்றவை வழங்கப்பட இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

🔻🔻🔻

No comments:

Post a Comment