மீன் பற்றி தெரிந்தவர்களுக்கு மத்தி மீன் பற்றி சொல்லவே தேவையில்லை. பட்ஜெட் விலையில் கிடைத்தாலும் அதனால் கிடைக்கும் நன்மைகளுக்கு அளவில்லை. அதனால்தான் வாரம் ஒரு முறையேனும் மத்தி மீன் வாங்கி சமைக்க சொல்வார்கள். சிலர் அதன் குறைந்த விலையை கண்டு குறைத்து மதிப்பிடுவார்கள். சிலர் அதில் முள் அதிகமாக இருக்கும் என்பதால் அதை பெரும்பாலும் வாங்க மாட்டார்கள். அதன் நன்மைகளை தெரிஞ்சுக்கிட்டா இனிமேல் தேடிப்போய் மத்தி மீன் வாங்குவீங்க.. அப்படி என்னதான் நன்மைகள் இருக்குனு தெரிஞ்சுக்கனுமா..? அப்போ மேலும் படிங்க..
மத்தி மீனில் இருக்கும் ஊட்டச்சத்துகள் என்ன..? மத்தி மீனில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைவாக உள்ளது. அதோடு விட்டமின் டி, கால்சியம், புரோட்டீன், நல்ல கொழுப்பு, ஃபோலேட், விட்டமின் பி12, செலினியம், பாஸ்பரஸ் போன்ற நன்மைகளை உள்ளடக்கியுள்ளது. சரி இவற்றால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
இதய ஆரோக்கியத்திற்கு நல்லது : வாரம் ஒரு முறையேனும் மத்தி மீன் சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும். வயதான காலத்தில் இதய நோய்களிலிருந்தும் தப்பிக்கலாம். இதில் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் இருப்பதால் கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும்.
இரத்த ஓட்டம் அதிகரிக்கும் : அழற்சி பண்புகளுக்கு எதிராக போராடுவதால் இரத்த உறைதல் பிரச்சனையை தவிர்க்க உதவுகிறது. இதனால் மற்ற உறுப்புகளுக்கும் சீரான இரத்த ஓட்டம் கிடைக்கிறது.
கூர்மையான கண் பார்வை : வயது செல்ல செல்ல உண்டாகும் பார்வை குறைபாடு பிரச்சனைகளுக்கு மத்தி மீன் சிறந்த மருந்தாக இருக்கிறது.
புற்றுநோயை தவிர்க்க உதவுகிறது : புற்றுநோய் செல்களுக்கு எதிராக போராடும் பண்புகள் மத்தி மீனில் இருப்பதால் எதிர்காலத்தில் புற்றுநோய் வராமல் தடுக்கிறது.
எலும்புகளுக்கு ஆரோக்கியம் : மத்தி மீனில் கால்சியம் மற்றும் பாஸ்பரஸ் அதிகளவில் இருப்பதால் எலும்பு ஆரோக்கியத்தை வலுப்படுத்துகிறது. இதனால் வயதான போது வரும் மூட்டு வலி பிரச்சனைகளுக்கும் பலனளிக்கிறது.
நோய் எதிர்ப்ப்ய் சக்தி அதிகரிக்கிறது : மத்தி மீனில் விட்டமின் டி நிறைவாக இருப்பதால் உணவுகளின் ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்ச உதவுகிறது. இதனால் உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைத்துவிடுகிறது.
சரும ஆரோக்கியம் : தொடர்ச்சியாக மத்தி மீன் சாப்பிட்டு வர ஹெல்தியான மற்றும் பளபளக்கும் சருமத்தை பெறுவீர்கள். இதை நீங்களே கண்கூட உணரலாம்.
நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது : மத்தி மீனில் ஆரோக்கியமான கொழுப்பு மற்றும் புரதச்சத்து இருப்பதால் உணவில் உள்ள இரத்த சர்க்கரை அளவை மெதுவாக உறிஞ்சுகிறது. இதனால் இன்சுலின் தட்டுப்பாடும் குறைகிறது.
ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்தது : ஒமேகா 3 கொழுப்பு அமிலம் இருப்பதால் ஆண்டி ஆக்ஸிடண்டிற்கு பஞ்சமே இருக்காது.
முழுமையாக உணர வைக்கும் : அதிக புரதம் மற்றும் குறைவான கொழுப்பு இருப்பதால் நிறைவாக சாப்பிட்ட திருப்தி கிடைக்கும். இதனால் நீண்ட நேரத்திற்கு பசியே எடுக்காது. ஃபுட் க்ரேவிங் இருக்காது. இதனால் எளிதில் உடல் எடையும் குறையும்.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment