காலையில் காஃபிக்கு பதிலாக இந்த பானங்களை குடித்து பாருங்கள்... உடல் நடக்கும் அற்புத மாற்றத்தை உணர்வீர்கள்! - Agri Info

Adding Green to your Life

February 24, 2024

காலையில் காஃபிக்கு பதிலாக இந்த பானங்களை குடித்து பாருங்கள்... உடல் நடக்கும் அற்புத மாற்றத்தை உணர்வீர்கள்!

 நம்மில் பெரும்பாலானோருக்கு காஃபி அல்லது டீ மிகவும் பிடித்தமான பானமாக இருக்கிறது. சிலருக்கு காலை மற்றும் மாலை நேரத்தை பொறுத்து இரண்டுமே பிடிக்கும். பலருக்கும் பெரும்பாலான நாட்கள் காலை நேரத்தில் சூடான ஒரு கப் காஃபியுடன் துவங்குகிறது.

பிடித்தமான காஃபியுடன் நாம் துவக்கும் நாள் நம்மை உற்சாகப்படுத்துகிறது மற்றும் நமது மனநிலையை சிறப்பாக வைக்கிறது. சிலர் ஒரு நாளைக்கு 1 அல்லது 2 முறை காஃபி குடிப்பதுடன் நிறுத்தி கொள்வார்கள். சிலர் நாளொன்றுக்கு கணக்கில்லாமல் காஃபி குடிப்பார்கள். அளவுக்கு அதிகமாக காஃபி குடிப்பதால் ஆரோக்கியத்திற்கு சில தீமைகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

காஃபியில் இருக்கும் காஃபின் உடலில் விழிப்புணர்வை அதிகரிக்க செய்கிறது. இது நாம் சோர்வடைய செய்யும் பிரெயின் கெமிக்கலான adenosine விளைவுகளை தடுக்கிறது. மிக அதிக அளவு காஃபின் நுகர்வு நடுக்கம் மற்றும் பதற்றம் உள்ளிட்ட அறிகுறிகளை வெளிப்படுத்தும். எனவே அதிக காஃபி குடிப்பதால் ஏற்படும் சிக்கல்களை கருத்தில் கொண்டு உங்கள் டயட்டில் காஃபிக்கு பதில் நீங்கள் சேர்த்து கொள்ள கூடிய 5 ஆரோக்கிய பானங்களை இங்கே பார்க்கலாம்.

கிரீன் டீ: பிரபல டீடாக்ஸ் பானமாக இருக்கும் கிரீன் டீ, நம் உடல் ஆரோக்கியத்திற்கு உதவும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களால் நிறைந்துள்ளது. இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ்களோடு பிளான்ட் கெமிக்கல்ஸ்களும் நிறைந்து இருப்பதால் உலகளவில் பிரபலமாக இருக்கும் ஆரோக்கியமான பானங்களில் ஒன்றாக இருக்கிறது. எனவே உங்களது தினசரி டயட்டில் கிரீன் டீ-யை சேர்த்து கொள்வது சிறந்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவுவதோடு, உங்களது தினசரி ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய கூடும்.


இளநீர் : தேங்காயில் பொட்டாசியம், சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்ற எலக்ட்ரோலைட்ஸ் இருப்பதால், இழந்த ஊட்டச்சத்துக்களை ரீபிளேஸ் செய்ய உதவுகிறது. மேலும் இளநீரில் கலோரிகள், கொழுப்புகள் மற்றும் கொலஸ்ட்ரால் குறைவாக இருப்பதால், உங்களை ஹைட்ரேட்டாக வைத்திருக்க உதவுகிறது. எனவே இளநீரை உங்களது பேலன்ஸ்ட் டயட்டின் ஒரு பகுதியாக சேர்த்து கொள்ளலாம்.

பீட்ரூட் ஜூஸ்: பீட்ரூட்டில் செல்களின் வளர்ச்சி மற்றும் செயல்பாட்டிற்கு உதவும் வைட்டமின் B9 (ஃபோலேட்) ஏராளமாக உள்ளது. ரத்த நாள சிதைவைத் தடுக்க ஃபோலேட் அவசியம். இது இதயம் சார்ந்த நோய்கள் மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தை குறைக்கிறது. இயற்கையாகவே பீட்ரூட்டில் நைட்ரேட்ஸ் நிறைய இருப்பதால், உடலில் நைட்ரிக் ஆக்சைடை உற்பத்தி செய்ய பீட்ரூட் உதவுகிறது.

லெமன் ஜூஸ்: உங்கள் டயட்டில் தொடர்ந்து லெமன் ஜூஸை சேர்த்து கொள்வதன் மூலம் நம்பமுடியாத ஆரோக்கிய நன்மைகளை நீங்கள் பெற முடியும். லென்னும் ஜூஸின் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைப்பதோடு எடையை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. மேலும் இது உடலுக்கு ஆன்டிஆக்ஸிடன்ட்டாக செயல்படுகிறது.

இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த பானம்: இலவங்கப்பட்டை மற்றும் தேன் கலந்த தண்ணீர் பானத்தை அடிக்கடி எடுத்து கொள்வது வாயுத் தொல்லையிலிருந்து நிவாரணம் பெற உதவும். தேன் மற்றும் இலவங்கப்பட்டை கலந்த நீரானது பாக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்ஸ் குணங்களை கொண்டுள்ளது. எனவே இந்த பானம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, தொற்று பாதிப்புகளில் இருந்து தற்காத்து கொள்ள மற்றும் நம்முடைய நல்வாழ்வை மேம்படுத்த உதவுகின்றன.


🔻 🔻 🔻 

No comments:

Post a Comment