CUET – UG நுழைவுத் தேர்வு விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் – NTA வெளியிட்ட முக்கிய தகவல்!
க்யூட் யூஜி நுழைவு தேர்வின் விண்ணப்ப பதிவுகள் தொடங்கியுள்ள நிலையில் தேர்வு குறித்தான விவரங்களை தேசிய தேர்வு முகமையானது வெளியிட்டு வருகிறது.
நுழைவுத் தேர்வு:
மத்திய அரசின் பல்கலைக்கழகங்களில் இளநிலை படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கு க்யூட் யூஜி நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதுவரையிலும் கடினி அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட்டு வந்த தேர்வுகள் நிகழாண்டு முதல் எழுத்து தேர்வாகவும் நடைபெற இருக்கிறது. மொத்தம் 380 நகரங்களிலும் வெளிநாடுகளின் 26 நகரங்களிலும் நாட்டின் 13 மொழிகளில் தேர்வுகள் நடைபெற உள்ளது. நடப்பாண்டு முதல் மாணவர்கள் அதிகபட்சமாக ஆறு தாள்களை மட்டுமே தேர்வு செய்து தேர்வு எழுதிக் கொள்ள முடியும். பிப்ரவரி 27ஆம் தேதி முதல் மார்ச் 26 ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்படுவதாக தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் நேற்று முதல் இத்தேர்வுக்கான விண்ணப்ப பதிவுகள் தொடக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில் தேர்வுக்கு மொத்தமாக விண்ணப்பித்திருக்கும் மாணவர்களின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு மட்டுமே தேர்வுகள் கணினி அல்லது எழுத்து தேர்வு முறையில் நடைபெறுமா என்று முடிவு செய்யப்படும். மே 15 முதல் 31 ஆம் தேதி வரை தேர்வுகள் நடைபெற உள்ள நிலையில் ஜூன் 30-ஆம் தேதி முடிவுகள் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment