ஐ.டி.பி.ஐ வங்கியில் 500 ஜூனியர் அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பதவிகளுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
இந்திய தொழில் மேம்பாட்டு வங்கியான ஐ.டி.பி.ஐ வங்கி, நாட்டின் முக்கிய பொதுத்துறை வங்கியாகும்.
நாடு முழுவதும் உள்ள இந்த வங்கியின் கிளைகளில்
இளநிலை உதவி மேலாளர், நிர்வாகி பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு
அறிவிப்பு வெளியிடபட்டுள்ளது. இந்தப் பணியிடங்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி 26.02.2024 ஆகும்.
Junior Assistant Manager
மொத்த காலியிடங்களின் எண்ணிக்கை: 500
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை
பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.31.2024 அன்று 20 முதல் 25 வயதிற்குள் இருக்க வேண்டும்.
SC/ST பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், PWD பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயதுச் சலுகை உண்டு.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ 6.14 – 6.50 லட்சம்
தேர்வு செய்யப்படும் முறை: அசிஸ்டெண்ட் மேனேஜர் பணியிடங்களுக்கு
ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் தேர்வில் திறனறிதல் (Reasoning) – 60 வினாக்கள்,
கணிதம் (Quantitative Aptitude) – 40 வினாக்கள், ஆங்கிலம் (English Language) – 40 வினாக்கள், பொது அறிவு (General/ Economy/ Banking Awareness) – 60 வினாக்கள் என
200 வினாக்கள் கேட்கப்படும். மொத்தம் 200 மதிப்பெண்களுக்கு தேர்வு இருக்கும். தேர்வு 2 மணி நேரத்திற்கு நடைபெறும். வினாக்கள் ஆங்கிலம் மற்றும்
ஹிந்தி மொழிகளில் இருக்கும். தேர்வில் தவறான வினாக்களுக்கு தலா 0.25 மதிப்பெண்கள் கழிக்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: இந்த பதவிகளுக்கு
https://www.idbibank.in/idbi-bank-careers-current-openings.aspx
என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: SC / ST / PWD பிரிவினருக்கு ரூ. 200,
மற்றவர்களுக்கு ரூ. 1000
விண்ணப்பிக்க கடைசி தேதி : 26.02.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://www.idbibank.in/pdf/careers/Detailed-Advertisement-PGDBF-2024-25.PDF என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
0 Comments:
Post a Comment