Search

இந்திய கடலோர காவல்படை Navik வேலைவாய்ப்பு 2024 – 260 காலிப்பணியிடங்கள்!

 இந்திய கடலோர காவல்படையானது கடலோர காவல்படையில் பதிவுசெய்யப்பட்ட பணியாளர் தேர்வு (CGEPT) மூலம் 260 Navik (பொது கடமை) ஆட்சேர்ப்புக்கான ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது. இந்த தேர்வுக்கான ஆன்லைன் வசதி அதிகாரப்பூர்வ இணையதளமான @ https://joinindiancoastguard.cdac.in/ இல் 13.02.2024 @ 11.00 AM முதல் 27.02.2024 @ 05.30 PM வரை  செயலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே ஆர்வமுள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


Indian Coast Guard காலிப்பணியிடங்கள்:

வடக்கு – 79 பணியிடங்கள்
மேற்கு – 66 பணியிடங்கள்
வடகிழக்கு – 68 பணியிடங்கள்
கிழக்கு – 33 பணியிடங்கள்
வட மேற்கு -12 பணியிடங்கள்
அந்தமான் & நிக்கோபார் – 03 பணியிடங்கள்

என மொத்தம் 260 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

பள்ளிக் கல்விக்கான கவுன்சில் (COBSE) அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் கணிதம் மற்றும் இயற்பியலுடன் 10+2 தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Navik வயது வரம்பு:

Navik (GD) பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 01 செப்டம்பர் 2002 முதல் 31 ஆகஸ்ட் 2006 வரை (இரண்டு தேதிகளையும் உள்ளடக்கி) பிறந்திருக்க வேண்டும். விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 22 க்குள் இருக்க வேண்டும்.

தமிழகத்தில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் – வெளியான அறிவிப்பு!

சம்பள விவரம்:

Navik (GD)பதவிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.21700/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

Stage- I (Computer Based Examination)
Stage – II (Assessment/Adaptability Test, Physical Fitness Test, Document Verification & Recruitment Medical Examination)
Stage – III (Document Verification, Pre-enrolment Medicals at INS Chilka)
Stage – IV (Training at INS Chilka)

 விண்ணப்ப கட்டணம்:

  • SC/ST – கட்டணம் கிடையாது
  • மற்ற விண்ணப்பதாரர்கள் – ரூ.300/-

விண்ணப்பிக்கும் முறை:

மேலே உள்ள அனைத்து தெளிவாக வகுக்கப்பட்ட அளவுகோல்களை பூர்த்தி செய்யும் ஆர்வமுள்ளவர்கள் 13.02.2024 முதல், இந்திய கடலோர காவல்படை இணையதளத்தில் உள்ள தொழில் வலைப்பக்கத்தில், அதாவது https://joinindiancoastguard.cdac.in/ என்ற இணைப்பின் மூலம் ஆன்லைனில் 27.02.2024 @ 05.30 PM வரை மட்டுமே  விண்ணப்பிக்க வேண்டும்.


🔻🔻🔻

0 Comments:

Post a Comment