இந்திய ரிசர்வ் வங்கி (RBI Bank) ஆனது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இதில் Bank’s Medical Consultant பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 அன்று வரை பெறப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கடைசி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
இந்திய ரிசர்வ் வங்கி பணியிடங்கள்:
Bank’s Medical Consultant பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே RBI வங்கியில் காலியாக உள்ளது.
Bank’s Medical Consultant கல்வி தகுதி:
MBBS அல்லது Post Graduate Degree-யை அரசு / அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி அல்லது பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென பெறப்பட்டு வருகிறது.
Bank’s Medical Consultant அனுபவம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு சம்பந்தப்பட்ட துறைகளில் குறைந்தது 02 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
Bank’s Medical Consultant சம்பளம்:
இந்த RBI வங்கி சார்ந்த பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது ரூ.1000/- ஒரு மணி நேரத்திற்கான சம்பளமாக பெறுவார்கள்.
RBI Bank தேர்வு முறை:
Bank’s Medical Consultant பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RBI Bank விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 11.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment