Steel Authority of India Limited-ல் (SAIL) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் Doctor (GDMO) பணியிடம் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கிடைத்த இந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ளவும்.
SAIL காலியிடங்கள்:
SAIL நிறுவனத்தில் Doctor (GDMO) பணிக்கென 03 பணியிடங்கள் காலியாக உள்ளது.
Doctor (GDMO) கல்வி விவரம்:
இப்பணிக்கு அரசு அல்லது MCI அங்கீகாரம் பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS டிகிரி தேர்ச்சி பெற்ற நபர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
SAIL வயது விவரம்:
Doctor (GDMO) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 01.02.2024 அன்றைய நாளின் படி, 69 வயதுக்கு மேற்படாதவராக இருக்க வேண்டும்.
Doctor (GDMO) ஊதிய விவரம்:
இந்த SAIL நிறுவன பணிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.1,00,000/- மாத ஊதியமாக பெறுவார்கள்.
SAIL தேர்வு செய்யும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Doctor (GDMO) விண்ணப்பிக்கும் விதம்:
Doctor (GDMO) பணிக்கென 16.02.2024 அன்று காலை 10.00 மணிக்கு ஜார்கண்டில் உள்ள SAIL நிறுவன அலுவலகத்தில் நடைபெறவுள்ள நேர்காணலில் கலந்து கொள்ளும் நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து உடன் கொண்டு வந்து நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment