அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் (SSC) இருந்து தற்போது வெளியான அறிவிப்பில் 2024ம் ஆண்டில் நடைபெறவுள்ள SSC Phase XII தேர்வுக்கான விண்ணப்பங்கள் வரவேற்க்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு மூலம் Group C, Group D பிரிவின் கீழ்வரும் பதவிகளுக்கென ஒதுக்கப்பட்டுள்ள 2049 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.SSC Phase XII 2024 தேர்வு விவரங்கள்:
SSC தேர்வாணையத்தால் நடத்தப்படும் SSC Phase XII தேர்வு மூலம் அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள Group C, Group D பணியிடங்கள் பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இந்த வகையில் இவ்வாண்டு நடைபெறவுள்ள SSC Phase XII 2024 தேர்வுக்கான அறிவிப்பானது 26.02.2024 அன்று https://ssc.nic.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
SSC Phase XII 2024 காலியிடங்கள்:
SSC Phase XII தேர்வுக்கென மொத்தமாக 2049 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.
SSC Phase XII 2024 கல்வி விவரம்:
இத்தேர்வு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் 10ம் வகுப்பு, 12ம் வகுப்பு அல்லது Graduate Degree தேர்ச்சி பெற்றவராக இருப்பது போதுமானது ஆகும்.
SSC Phase XII 2024 வயது விவரம்:
SSC Phase XII தேர்வுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 01.01.2024 அன்றைய தினத்தின் படி, 18 வயது முதல் 42 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
SC / ST – 05 ஆண்டுகள், OBC / ESM – 03 ஆண்டுகள், PWBD – 10 முதல் 15 ஆண்டுகள் வரை என வயது தளர்வுகளும் வழங்கப்பட்டுள்ளது.
SSC Phase XII 2024 தேர்வு செய்யும் முறை:
Computer Based Examination (CBE)
Skill Test / Computer Proficiency Test
Document Verification
Medical Examination
மேலும் SSC Phase XII எழுத்து தேர்வானது மே மாதம் 06ம் தேதி முதல் 08ம் தேதி வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
SSC Phase XII 2024 விண்ணப்ப கட்டணம்:
SC / ST / Women / PWBD / EXSM – விண்ணப்ப கட்டணம் கிடையாது
மற்ற நபர்கள் – ரூ.100/-
SSC Phase XII 2024 விண்ணப்பிக்கும் வழிமுறை:
SSC Phase XII தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் 26.02.2024 அன்று முதல் 18.03.2024 அன்று வரை கீழே தரப்பட்டுள்ள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை எளிமையாக ஆன்லைனில் பதிவு செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment