அரசு வேலைக்காக தமிழ்நாடு அரசு சார்பாக தேர்வுகள் நடத்தப்படுகிறது. அந்தவகையில் 6,244 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ‘குரூப் - 4’ தேர்வுகளை நடத்தவிருக்கிறது. இதற்கான அறிவிப்பினை டிஎன்பிஎஸ்சி (TNPSC) ஜனவரி 30-ம் தேதி வெளியிடப்பட்டது. குரூப்-4 தேர்வு ஜூன் மாதம் 9ஆம் தேதி நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க பிப்ரவரி 28-ம் தேதி கடைசி நாள் என்றும் டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. மேலும், இப்போட்டி தேர்விற்கு பல்வேறு தரப்பு நபர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். டிஎன்பிஎஸ்சி (TNPSC) ‘குரூப் - 4’ தேர்வு எப்படி இருக்கும் என்பதை இங்கு விரிவாக காணலாம்.
தமிழ்நாடு அரசு பணிகளில் சேர விரும்பும் நபர்களுக்காகவே தமிழக அரசன் அரசு சார்த்த பணிகளுக்கு தகுதியானவர்களை தேர்ந்தெடுக்க தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் பல்வேறு அரசு தேர்வுகள் நடத்தப்படுகிறது. (TNPSC) தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் TNPSC குரூப் 4 தேர்வு என்பதையும் நடத்துகிறது.
தேர்வு முறை :
குரூப் 4 தேர்வுக்கு 18 முதல் 37 வயதுடையவர்கள் விண்ணப்பம் செய்யலாம். ஸ்டேனோ டைபிஸ்ட், கிராம நிர்வாக அலுவலர் (VAO), பில் கலெக்டர், டைபிஸ்ட், ஜூனியர் உதவியாளர், நில அளவையாளர் மற்றும் இவ்வாண்டு முதல், தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணியில் அடங்கிய தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய ஆகிய பணியிடங்கள் TNPSC குரூப் 4 தேர்வு மூலம் தேர்வாகும் நபர்களுக்கு வழங்கப்படும்.
குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற நபர்களும் பன்னிரண்டாம் வகுப்பு பட்டப்படிப்பு பட்டைய படிப்பு படித்தவர்களும் தேர்வு எழுதலாம் .ஜூனியர் அசிஸ்டெண்ட் பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பட்டப்படிப்பு மற்றும் பட்டயப்படிப்பு படித்தவர்களுக்கும் குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.
என்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு ஒரே கட்ட எழுத்து தேர்வு முறை ஆகும். எழுத்துத் தேர்வில் மொத்தம் 200 வினாக்கள் கேட்கப்படும். இது, பொது அறிவு (திறனறிவு), பொது ஆங்கிலம் பொது தமிழ், திறனறிவு என 3 பிரிவுகளை கொண்டு வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண்கள் என்ற வீதத்தில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடத்தப்படும். Objective முறையில் அனைத்து கேள்விகளும் கேட்கப்படும். குரூப் - 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும். அதில், 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு வினாக்களும் இருக்கும். TNPSC குரூப் 4 தேர்வு மூன்று பிரிவுகளை கொண்டது. அதாவது, பொது ஆய்வுகள் - திறன் மற்றும் மனத்திறன் - தமிழ் தகுதி மற்றும் மதிப்பெண் தேர்வு ஆகிய பிரிவுகளை கொண்டது. அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாட பகுதியிலிருந்து கேட்கப்படும். தேர்வர்கள் ஏதேனும் ஒரு மொழிப்பிரிவை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment