அரசுப்பணியில் சேர் வேண்டும் என்பது பலரது கனவாக உள்ளது. அதனால் தான் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போட்டித்தேர்வுகளுக்கு விண்ணபித்து வருகின்றனர். நேரடி பணி நியமனம் செய்த காலம் போய் இன்று யு.பி.எஸ்.சி போல தகுதி வாய்ந்த இளைஞர்களை டி.என்.பி.யும் தேர்வுகளை நடத்தி வருகிறது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் கீழ் உள்ள பல்வேறு பணியிடங்கள் குரூப் வாரியாக பிரித்து தேர்வு நடத்தப்படுகிறது. அதில் ஒன்று தான் குரூப் 4 தேர்வு.
குரூப் 4 தேர்வு என்றால் என்ன ?தமிழ்நாடு அமைச்சுப்பணி, தமிழ்நாடு வக்பு வாரியம், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம், உள்ளிட்ட பல்வேறு அரசு நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து, கிராம நிர்வாக அலுவலர் ஆகிய பணியிடங்களுக்கான அறிவிப்பே குரூப் 4 தேர்வு. மேலும், இவ்வாண்டு முதல், தமிழ்நாடு வனச் சார்நிலைப் பணியில் அடங்கிய தமிழ்நாடு வனத்துறையில் உள்ள வனக் காப்பாளர், ஓட்டுநர் உரிமத்துடன் கூடிய வனக் காப்பாளர், வனக் காவலர் மற்றும் வனக் காவலர் (பழங்குடியின இளைஞர்) ஆகிய பதவிகளுக்கான நியமனங்களும் குரூப் 4 தேர்வு வாயிலாகவே நிரப்பப்பட இருக்கின்றன.
குரூப் 4 பணியிடங்கள்:
கிராம நிர்வாக அலுவலர் (VAO) , டைப்பிஸ்ட், ஸ்டெனோ டைப்பிஸ்ட், ஜூனியர் உதவியாளர், பில் கலெக்டர், நில அளவையாளர் போன்ற பணியிடங்கள் குரூப் 4 தேர்வின் மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?
குரூப் 4 தேர்வெழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 18 வயது முதல் 37 வயதுடையோர் அனைவரும் தகுதியுடையோர். இதில் ஜூனியர் உதவியாளர் பணியிடத்திற்கு மட்டும் 12 ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பை பொருத்தவரை வி.ஏ.ஓ தேர்வுக்கு மட்டும் 21 வயது முதல் 32 வயதுடையோர் மட்டும் விண்ணப்பிக்கலாம். இதில் சில பணியிடங்களில் சில பிரிவினருக்கு வயது வரம்பில் சலுகைகளும் உள்ளன.
சம்பளம்:
இந்த பணியிடங்களுக்கு தகுதிக்கு ஏற்ப குறைந்து மாதம் 19500 முதல் 62,000 ஊதியம் வழங்கப்படும்.
பாடத்திட்டம்:
குரூப் 4 தேர்வை தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் எழுதலாம். இது 200 வினாக்களை கொண்ட எழுத்து தேர்வு முறை. ஒரு வினாவுக்கு 1.5 மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். அனைத்தும் objective typeல் இருக்கும்.குரூப் - 4 தேர்வின் வினாத்தாளில் இரண்டு பகுதிகளாக வினாக்கள் கேட்கப்படும். அவற்றில் 100 வினாக்கள் தமிழ் அல்லது ஆங்கிலம் பாடப்பகுதியிலிருந்து கேட்கப்படும். மீதம் உள்ள 100 வினாக்கள் பொது அறிவு பகுதியில் இருந்து கேட்கப்படும். அதில், 75 பொது அறிவு வினாக்களும், 25 திறனறி தேர்வு (Aptitude Test) வினாக்களும் இருக்கும். எழுத்துத் தேர்வில் தகுதி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு அழைக்கப்பட்டு, தகுதி பெறுபவர்களுக்கு கலந்தாய்வு மூலம் பணியிடங்கள் வழங்கப்படும்.
எப்படி விண்ணப்பிக்கலாம்?
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரபூர்வ வலைத்தளமான tnpscexams.in என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பிக்கலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment