Search

சொந்தமா தொழில் தொடங்க ஆசையா? ₹2,25, 000 ரூபாய் வரை தாட்கோவில் மானியம் பெற வாய்ப்பு!

 தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் self employment program for youth (SEPY)எனப்படும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம்.

SEPY:

இத்திட்டத்தின் மூலம் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் 2,25,000 ரூபாய் வரை கடனாகவும், மானியமாகவும் பெறலாம். வேலை இல்லாத அல்லது குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க உதவி செய்து அவர்களை முன்னேற்றுவது தான் இதன் முக்கிய நோக்கம்.

தகுதிகள்:

இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

1. 18 முதல் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்.

2. குடும்பத்தின் ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.

3. தொடங்க போகும் தொழில் பற்றிய அறிவு மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

4. விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எவரும் இதற்கு முன் தாட்கோவில் கடன் பெற்றிருக்க கூடாது.

5. மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.

நிபந்தனைகள்:

இதில் பயன்பெற சில நிபந்தனைகளும் உள்ளன. அவற்றில்,

1. விண்ணப்பதாரர் தொடங்க போகும் தொழிலை அவரே தேர்வு செய்யலாம்.

2.தொழில் மூலம் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும்‌.

3. மானியம் பெற்ற மாவட்டத்திலே தொழில் தொடங்க வேண்டும்.

எப்படி விண்ணப்பிப்பது?

மாவட்ட தாட்கோ அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது www.tahdco.com   என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்பு அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

IIT Junior Technician வேலைவாய்ப்பு – 10ம் வகுப்பு தேர்ச்சி போதும் || உடனே விரையுங்கள்!

 

IT துறையில் வேலை வேண்டுமா? உங்களுக்கான சூப்பர் வேலைவாய்ப்பு இதோ!

Cognizant Technology Solutions ஆனது வேலைவாய்ப்பு குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Senior Process Executive பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் ஏதேனும் ஒரு டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையலாம்.

IIT Tirupati காலிப்பணியிடங்கள்:

Student Counsellor, Hindi Translator, Junior Nursing Officer, Junior Assistant, Junior Technician பணிக்கென காலியாக உள்ள 8 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Junior Technician கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10ம் வகுப்பு / 12ம் வகுப்பு / Degree / Masters Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Tirupati வயது வரம்பு:

பணியின் அடிப்படையில் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயதானது 32, 35 மற்றும் 45 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Junior Technician ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் Level 10 அளவில் மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

IIT Tirupati தேர்வு செய்யப்படும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 11.04.2024 ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF


தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில் Senior Analyst வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

தனியார் கார் உற்பத்தி நிறுவனத்தில் Senior Analyst வேலை – ஆன்லைன் விண்ணப்பங்கள் வரவேற்பு!

Senior Analyst, Technical Anchor பணிக்கான காலியிடங்களை நிரப்புவது குறித்த புதிய அறிவிப்பு ஒன்றை முன்னணி தனியார் கார் உற்பத்தி நிறுவனம் ஆன Ford ஆனது தற்போது வெளியிட்டுள்ளது. Engineering Degree தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். இந்த பணி குறித்த முழு விவரங்களையும் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம். விருப்பமுள்ளவர்கள் இறுதி நாள் முடிவதற்குள் விண்ணப்பித்து பயனடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

Ford காலிப்பணியிடங்கள்:

தற்போது வெளியாகியுள்ள அறிவிப்பின் படி Senior Analyst, Technical Anchor பணிகளுக்கென பல்வேறு காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

Senior Analyst கல்வி தகுதி:

இப்பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் Engineering Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ford வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விவரங்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

Senior Analyst ஊதிய விவரம்:

தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு Ford-ன் நிபந்தனைகளின்படி ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Ford தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 05.04.2024, 17.04.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Download Notification PDF 1

Download Notification PDF 2 



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

SSC; மத்திய அரசில் 968 ஜூனியர் என்ஜினியர் பணியிடங்கள்; டிப்ளமோ, பி.இ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் (ஜூனியர் என்ஜினியர்) பணியிடங்களை நிரப்ப மத்திய பணியாளர் தேர்வு வாரியம் (SSC) அறிவிப்பு வெளியிட்டுள்ளது. என்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு 

எஸ்.எஸ்.சி தேர்வுகளை நடத்தி தகுதியானவர்களை நியமித்து 

வருகிறது. அந்த வகையில் மத்திய பொதுப்பணித்துறை, மத்திய நீர் ஆணையம், எல்லை சாலைகள் ஆணையம், தேசிய தொழில்நுட்ப 

ஆராய்ச்சி கழகம் உள்ளிட்ட மத்திய அரசின் பல்வேறு துறைகள் 

மற்றும் நிறுவனங்களில் காலியாக உள்ள இளநிலை பொறியாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 18.04.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

ஜூனியர் என்ஜினியர் (JUNIOR ENGINEER)

நிரப்பப்படும் பிரிவுகள்- CIVIL, MECHANICAL, ELECTRICAL AND QUANTITY SURVEYING & CONTRACTS

காலியிடங்களின் எண்ணிக்கை: 968

கல்வித் தகுதி : CIVIL, MECHANICAL, ELECTRICAL ஆகிய பிரிவுகளில், 

ஏதேனும் ஒன்றில் டிகிரி அல்லது டிப்ளமோ படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி : 30 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். 

இருப்பினும், SC/ST பிரிவுகளுக்கு 5 ஆண்டுகளும், OBC பிரிவுகளுக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத் திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும் வயது 

வரம்பு தளர்வு உண்டு.

சம்பளம் : ரூ. 35,400-1,12,400

தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு இரண்டு 

கணினி வழி தேர்வு (Computer Based Examination) மூலம் 

தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

முதல் கணினி வழி தேர்வு 200 மதிப்பெண்களுக்கு 2 மணி நேர கால 

அளவில் நடைபெறும். இந்த தேர்வில் பொது அறிவு (General Awareness), திறனறிதல் (General Intelligence & Reasoning) ஆகிய பகுதிகளில் இருந்து 

தலா 50 கேள்விகளும், சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவில் 

இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 

இரண்டாவது கணினி வழித் தேர்வானது, 300 மதிப்பெண்களுக்கு 

2 மணி நேர கால அளவில் நடைபெறும். இதில் சம்பந்தப்பட்ட 

பொறியியல் பாடப்பிரிவில் இருந்து 100 வினாக்கள் இடம்பெறும்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://ssc.gov.in/ என்ற இணையதள பக்கம் மூலம் 

ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC/ST பிரிவினர் மற்றும் பெண்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய 

https://ssc.gov.in/api/attachment/uploads/masterData/NoticeBoards/notice_28032024.pdf 

என்ற இணையதளப் பக்கத்தினைப் பார்வையிடவும்.

🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

சென்னை ராணுவ வாகன ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; 60 பணியிடங்கள்; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 சென்னை ஆவடியில் உள்ள டி.ஆர்.டி.ஓ (DRDO) நிறுவனத்தில் ஐ.டி.ஐ (ITI) படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும், இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் ஒரு 

அங்கமான ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு 

நிறுவனத்தில் (CVRDE) தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான 

அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு 

விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2024

காலியிடங்களின் விவரம்

Carpenter – 2

COPA - 8

Draughtsman (Mechanical) – 4

Electrician – 6

Electronics - 4

Fitter – 15

Machinist – 10

Mechanic (Motor Vehicle) – 3

Turner – 5

Welder – 3

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். 

ஊக்கத்தொகை : COPA, Carpenter, Welder பிரிவுகளுக்கு ரூ. 7700

பிற பிரிவுகளுக்கு : ரூ. 8050

வயது தகுதி: 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினர் 30 வயது வரையிலும், 

SC/ST பிரிவினர் 32 வயது வரையிலும், PWD பிரிவினர் 37 வயது 

வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் 

பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://drdo.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2024

மேலும் விவரங்களுக்கு 

https://www.drdo.gov.in/drdo/sites/default/files/career-vacancy-documents/advtcvrdeApp28032024.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

தமிழக வேளாண் துறை வேலை வாய்ப்பு; 23 பணியிடங்கள்; 10-ம் வகுப்பு, டிகிரி படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 தமிழ்நாடு அரசின் வேளாண்மைத் துறையின் கீழ் செயல்பட்டு மாநில திட்ட மேலாண்மை பிரிவில் காலியாக உள்ள உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் மற்றும் கணக்காளர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 23 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 30.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள். 

Business Analyst 

காலியிடங்களின் எண்ணிக்கை : 3

கல்வித் தகுதி : MBA  படித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி 

அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Financial Analyst

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : MBA (Finance) படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட 

பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Clerical Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

மேலும் 3-5 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Help Desk Operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 10

கல்வித் தகுதி : இளங்கலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். 

மேலும் 2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Data Entry operator

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : B.Sc Computer Science படித்திருக்க வேண்டும். மேலும் 

2 வருட பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Typist

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும். மேலும் 2 வருட 

பணி அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Accountant

காலியிடங்களின் எண்ணிக்கை : 1

கல்வித் தகுதி : M.Com படித்திருக்க வேண்டும். மேலும் 10 வருட பணி 

அனுபவம் அவசியம்.

வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.

Office Assistant

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் 

தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.tnagrisnet.tn.gov.in/includes/noti/AF.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை 

பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் 

கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: Director of Agriculture, Directorate, IT section, 4 th Floor, 1, Wallahjah Rd, 

PWD Estate, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu 600 005.

விண்ணப்பிக்க கடைசி தேதி : 30.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://www.tnagrisnet.tn.gov.in/home/notification இணையதளப் 

பக்கத்தைப் பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

பிரதமரின் வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ₹5 கோடி நிதி... பெறும் வழிமுறைகள் இதோ.

 தேனி மாவட்டத்தில் படிப்பு முடிந்தவுடன், தொழில் தொடங்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் அரசு வழங்கும் கடன்களை பெற்று தொழில் தொடங்கலாம் எனவும் அதற்கு அதிகபட்சமாக வழங்கப்பட்டு வந்த மானிய தொகை தற்போது அதிகரிக்கப்பட்டு 75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

PMEGP திட்டம் :-

பிரதமரின் ரோஜ்கர் யோஜனா (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இரண்டு திட்டங்களையும் இணைத்து பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்ற புதிய கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் அறிமுகப்பட்டது . இந்தத் திட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நுண்ணிய நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும்.

இந்த திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் வணிகத் திட்டங்களைத் தயாரிக்க உதவுவதுடன், புதிய உற்பத்தி மற்றும் சேவை முயற்சிகளை அமைப்பதற்காக நிதி நிறுவனங்களுடன் இணைவதற்கு உதவுவதாகும். இத்திட்டத்தின் பயனாளிகள் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் 5 கோடி வரை கடன் பெறலாம். தொழில்முனைவோர் நிலத்தின் விலை, வாடகை/குத்தகை கட்டிடம், தொழில்நுட்ப அறிவு, பூர்வாங்க மற்றும் முன் செலவுகளைச் அவர்களை சந்திக்க வேண்டும்.

“வேலையில்லாத இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் (UYEGP) சமூகத்தில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினரின் வேலையின்மை பிரச்சினைகளைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பாக படித்தவர்கள் மற்றும் வேலையில்லாதவர்கள் மத்தியில் கடன் வாங்குவதன் மூலம் உற்பத்தி / சேவை / வணிக நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் சுயதொழில் செய்ய ஊக்குவிப்பதாகவும்.

மானியத் தொகை அதிகரிப்பு :-

தேனி மாவட்டத்தில், புதிய தொழில் துவங்க மானியத் தொகையாக ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பில் 21 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினரை சேர்ந்தவர்களும் , 21 முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினர், அதாவது எஸ்.சி.எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் துவங்க வங்கி கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. ஆனால் தற்போது கல்வி தகுதியை அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பயன் பெறலாம். இதில் சக்கரம் அலைன்மென்ட், கிளினிக்கல் டெஸ்டிங், ஜிம், கோல்டு ஸ்டோரேஜ், கான்கிரீட் கலவை இயந்திரம், அரிசி ஆலை, பருப்பு மில், சமையல் எண்ணெய், ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற தொழில்கள் துவங்கலாம்.

இத்திட்டத்தில் முதலில் அதிகபட்சமாக 50 லட்சம் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டது. தற்போது அதிகபட்ச முதலீட்டு மானியத் தொகையை ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மேலும் கூடுதளாக வட்டி மானியமும் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரை ஊக்கவிக்க 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனைப் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு https://www.msmeonline.tn.gov.in/நீட்ஸ் என்ற இணையதளத்தில் பார்வையிட்டு பயனடையலாம்.



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Wipro நிறுவனத்தில் சூப்பரான காத்திருக்கும் வேலை – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 Wipro நிறுவனமானது வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. Lead Administrator பணிக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.


Wipro பணியிடங்கள்:

Wipro நிறுவனத்தில் காலியாக உள்ள Lead Administrator பணிக்கென பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

Lead Administrator கல்வி விவரம்:

Lead Administrator பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி நிலையங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Lead Administrator பிற தகுதி:

  • Managing Complexity
  • Client Centricity
  • Execution Excellence
  • Passion for Results
  • Team Management
  • Stakeholder Management

Lead Administrator சம்பள விவரம்:

இப்பணிக்கு தேர்வாகும் பணியாளர்கள் பணியின் போது Wipro நிறுவன விதிமுறைப்படி மாத சம்பளம் பெறுவார்கள்.

Wipro தேர்வு செய்யும் முறை:

இந்த Wipro நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு, திறன் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Wipro விண்ணப்பிக்கும் வழிமுறை:

Lead Administrator பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள இணைப்பில் Apply என்பதை கிளிக் செய்ய வேண்டும். பிறகு தோன்றும் விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். சரியான தகவல்கள் இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

Download Notification & Application Form Link


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

மாதம் ரூ.143000/- ஊதியத்தில் வேலைவாய்ப்பு – விண்ணப்பிக்க மிஸ் பண்ணிடாதீங்க!

 சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையம் (IFSCA) அகில இந்திய அளவில் Officer Grade A (Assistant Manager) பதவிக்கான ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பை ifsca.gov.in இல் வெளியிட்டுள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 21-04-2024 அல்லது அதற்கு முன் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

IFSCA காலிப்பணியிடங்கள்:

Officer Grade A (Assistant Manager) பதவிக்கு என 10 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

IFSCA அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி விண்ணப்பதாரர் அங்கீகரிக்கப்பட்ட வாரியங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் CA, CFA, CS, ICWA, Degree, LLB, Master’s Degree, Masters in Computer Application/Information Technology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Officer வயது வரம்பு:

சர்வதேச நிதிச் சேவை மையங்கள் ஆணையத்தின் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, 01-02-2024 தேதியின்படி விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 30 ஆக இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

விண்ணப்பக் கட்டணம்:

SC/ST/PwBD விண்ணப்பதாரர்கள்: ரூ.100/-
UR/OBC/EWS விண்ணப்பதாரர்கள்: ரூ.1000/-
பணம் செலுத்தும் முறை: ஆன்லைன்

சம்பள விவரம்:

இதில் தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.44500-143000/- ஊதியம் வழங்கப்பட உள்ளது.

தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் ஆன்லைன் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

IFSCA விண்ணப்பிக்கும் முறை:

தகுதியானவர்கள் IFSCA அதிகாரப்பூர்வ இணையதளமான ifsca.gov.in இல் ஆன்லைனில் 28-03-2024 முதல் 21-04-2024 வரை விண்ணப்பிக்கலாம்.

Download Notification 2024 Pdf


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

Repco வங்கியில் ரூ.1,50,000/- மாத சம்பளத்தில் வேலை – டிகிரி முடித்தவர்கள் விரைந்து விண்ணப்பியுங்கள்!

 சென்னையில் அமைந்துள்ள Repco வங்கியில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் வெளியான அறிவிப்பில் Chief Risk Officer, Assistant General Manager, Manager , Officer on Special Duty ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளை வரை (30.03.2024) மட்டுமே கால அவகாசமானது வழங்கப்பட்டுள்ளது. எனவே இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இந்த நொடியே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

Repco வங்கி வேலைவாய்ப்பு விவரங்கள்:

  • Chief Risk Officer, Assistant General Manager, Manager , Officer on Special Duty ஆகிய பணிகளுக்கென 10 பணியிடங்கள் Repco வங்கியில் காலியாக உள்ளது.
  • Post Graduate, MBA, CA, ICWA, Graduate Degree ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
  • இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 40 வயது முதல் 62 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
  • Interview, Shortlisting, Document Verification ஆகிய தேர்வு முறைகளின் மூலம் இப்பணிகளுக்கு தகுதியான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
  • மேற்கண்ட தேர்வு முறைகளின் வாயிலாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்களுக்கு ரூ.40,000/- முதல் ரூ.1,50,000/- வரை மாத சம்பளமாக தரப்படும்.

Repco Bank விண்ணப்பிக்கும் வழிமுறை:

இந்த Repco வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் கீழே தரப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 30.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

வங்கி பணிக்கு விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் மூலம் ஆஃப்லைனில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் விண்ணப்பப் படிவத்தை உரிய சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களுடன் பொது மேலாளர் (நிர்வாகம்), ரெப்கோ வங்கி, பி.பி.எண்.1449, ரெப்கோ டவர், எண்.33 வடக்கு உஸ்மான் சாலை, தி. நகர், சென்னை 600017 என்ற முகவரிக்கு 28.02.2024 க்குள் அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.

Detailed Notification – CRO

Application format – CRO

Detailed Notification – CHARTERED ACCOUNTANT

Application format – CHARTERED ACCOUNTANT

Detailed Notification OSD

Application format – OSD



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news