தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள எண்ணற்ற பணியிடங்களுக்குத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இதில், நான் முதல்வன் திட்டத்தில் IT head, senior manager, program manager உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பைதமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் (Tamil Nadu skill development corporation) வெளியிட்டுள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் ஏப்ரல் மாதம் 20ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள் எண்ணிக்கை, வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு முறை, விண்ணப்பிக்கும் முறை ஆகியவை அறிவிப்பில் (Recruitment Notice) தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன.
இதற்கான விண்ணப்பங்களை https://naanmudhalvan.tn.gov.in/JobRecruitment/ என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 20-4-2024 ஆகும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment