சென்னைக் குடிநீர் வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்! - Agri Info

Adding Green to your Life

March 7, 2024

சென்னைக் குடிநீர் வாரியத்தில் பணிபுரிய வாய்ப்பு – சம்பளம்: ரூ.1,00,000/- || விரைந்து விண்ணப்பியுங்கள்!

 சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் (CMWSSB) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. Legal Advisor பணியிடம் காலியாக இருப்பதாக இந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

சென்னைக் குடிநீர் வாரியம் பணியிடங்கள்:

சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் வாரியத்தில் காலியாக உள்ள Legal Advisor பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.

Legal Advisor கல்வி விவரம்:

இந்த பணிக்கு அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற சட்ட கல்லூரிகளில் Law பாடப்பிரிவில் Bachelor’s Degree தேர்ச்சி பெற்றவர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது.

Legal Advisor அனுபவ விவரம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் பணிக்கு தொடர்புடைய துறைகளில் குறைந்தது 05 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.

Legal Advisor வயது விவரம்:

01.01.2024 அன்றைய தேதியின் படி, 30 வயதுக்கு உட்பட்டவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

Legal Advisor ஊதிய விவரம்:

இந்த சென்னை குடிநீர் வாரியம் சார்ந்த பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.1,00,000/- மாத ஊதியமாக வழங்கப்படும்.

Legal Advisor தேர்வு செய்யும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல், எழுத்து தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Legal Advisor விண்ணப்பிக்கும் வழிமுறை:

Legal Advisor பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இப்பணிக்கான விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 10.04.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment