12 ஆம் வகுப்பு முடித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் 1074 காலிப்பணியிடங்கள்! - Agri Info

Adding Green to your Life

March 9, 2024

12 ஆம் வகுப்பு முடித்தவரா? உங்களுக்காக காத்திருக்கும் 1074 காலிப்பணியிடங்கள்!

 IGI ஏவியேஷன் சர்வீசஸ் – டெல்லி விமான நிலையத்தில் முன்னணி விமான சேவை வழங்கும் நிறுவனம் ஆகும். இங்கு காலியாக உள்ள Customer Service Agent  பதவிக்கு என மொத்தம் 1074 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு தகுதியும் திறமையும் உள்ள ஆண் மற்றும் பெண் விண்ணப்பதாரர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் 22.05.2024 வரை வரவேற்கப்படுகின்றன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

IGI காலிப்பணியிடங்கள்:

Customer Service Agent  பதவிக்கு என மொத்தம் 1074 பணியிடங்கள் காலியாக உள்ளன.

கல்வி தகுதி:

அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனம் அல்லது பல்கலைக்கழகத்தில் இருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். விமானப் போக்குவரத்து/விமானச் சான்றிதழ் அல்லது டிப்ளமோ தேவையில்லை. 12ம் வகுப்பு தேர்வு முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு:

விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.

Agent தேர்வு செயல் முறை:

இப்பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

www.igiaviationdelhi.com என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் உள்நுழைந்து ஆன்லைன் பதிவு மூலம் மட்டுமே விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும். வேறு எந்த முறையிலும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment