Investigator, Research Officer, Technical Officer ஆகிய பணிகளுக்கென உள்துறை அமைச்சகத்தில் (MHA) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.1,51,100/- மாத ஊதியமாக வழங்கப்பட உள்ளது. இந்த மத்திய அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
உள்துறை அமைச்சகம் காலியிடங்கள்:
உள்துறை அமைச்சகத்தில் (MHA) பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
- Investigator – 01 பணியிடம்
- Research Officer – 01 பணியிடம்
- Technical Officer – 01 பணியிடம்
MHA கல்வி:
இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசு சார்ந்த கல்லூரி / கல்வி நிறுவனங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் Bachelor’s Degree, Master Degree அல்லது Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
MHA அனுபவம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய / மாநில அரசு நிறுவனங்கள், UT / PSU நிறுவனங்களில் பணி சார்ந்த துறைகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள ஊதிய அளவின் கீழ்வரும் ஒத்த பதவிகளில் 03 ஆண்டுகள் முதல் 10 ஆண்டுகள் வரை பணிபுரிந்த அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும்.
MHA வயது வரம்பு:
இந்த மத்திய அரசு சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் 56 வயதுக்கு மேற்படாதவராக இருப்பது அவசியமானது ஆகும்.
MHA சம்பளம்:
- Investigator பணிக்கு Level – 6 படி, ரூ.35,400/- முதல் ரூ.1,12,400/- வரை என்றும்,
- Research Officer பணிக்கு Level – 7 படி, ரூ.44,900/- முதல் ரூ.1,42,400/- வரை என்றும்,
- Technical Officer பணிக்கு Level – 8 படி, ரூ.47,600/- முதல் ரூ.1,51,100/- வரை என்றும் மாத சம்பளமாக வழங்கப்படும்.
MHA தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் Deputation / Absorption விதிமுறைப்படி தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
MHA விண்ணப்பிக்கும் விதம்:
இந்த உள்துறை அமைச்சகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 02.05.2024 அன்றுக்குள் தபால் செய்ய வேண்டும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment