மத்திய அரசின் பல்வேறு துறைகள், அமைச்சங்கள், அமைப்புகள் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
பல்வேறு பிரிவுகளில் உள்ள 2,157 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதார்கள் 18 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் அதிகபட்சமாக 42 வயது வரை இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பதவிகளுக்கு 25 முதல் 30 வயது வரம்பாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வயது வரம்பு தளர்வுகளுக்கு அறிவிப்பை காணலாம்.
பதவிகளின் விவரம், வயது வரம்பு, தேவையான கல்வித்தகுதி, கட்டணம், தேர்வு விவரம், எவ்வாறு விண்ணப்பிப்பது என்பன போன்ற விவரங்கள் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் விரிவாக கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பதாரர்கள் இந்த ஆணையத்தின் http://ssc.gov.in என்ற இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பம் செய்வதற்கான கடைசி தேதி 18.03.2024 (இரவு 23:00 மணி) இணைய தளம் மூலம் கட்டணம் செலுத்த கடைசி தேதி 19.03.2024 (இரவு 23:00 மணி).
தென் மாநிலங்களில் 2024 மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ம் தேதி வரை (உத்தேசமானது) கணினி அடிப்படையிலான தேர்வுகள் கீழ்காணும் முறையில் 23 மையங்கள் / நகரங்களில் நடைபெறும். ஆந்திரப்பிரதேசத்தில் 11 மையங்கள் ; தெலங்கானாவில் 3 மையங்கள்; புதுச்சேரியில் 1 மையங்கள்; தமிழ்நாட்டில் 8 மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
🔻🔻🔻
0 Comments:
Post a Comment