தமிழ்நாடு ஆதி திராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு கழகம் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூக பொருளாதார நிலையை மேம்படுத்த பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதில் ஒன்று தான் self employment program for youth (SEPY)எனப்படும் இளைஞர்களுக்கான சுய வேலை வாய்ப்பு திட்டம்.
SEPY:
இத்திட்டத்தின் மூலம் தொழில் செய்ய விரும்பும் இளைஞர்கள் 2,25,000 ரூபாய் வரை கடனாகவும், மானியமாகவும் பெறலாம். வேலை இல்லாத அல்லது குறைந்த ஊதியத்தில் பணியாற்றும் இளைஞர்கள் சுயதொழில் தொடங்க உதவி செய்து அவர்களை முன்னேற்றுவது தான் இதன் முக்கிய நோக்கம்.
தகுதிகள்:
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற விண்ணப்பதாரர் பின்வரும் தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.
1. 18 முதல் 35 வயதுக்குட்பட்டோராக இருக்க வேண்டும்.
2. குடும்பத்தின் ஆண்டு வருமானம் மூன்று லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும்.
3. தொடங்க போகும் தொழில் பற்றிய அறிவு மற்றும் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
4. விண்ணப்பதாரர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் எவரும் இதற்கு முன் தாட்கோவில் கடன் பெற்றிருக்க கூடாது.
5. மத்திய மாநில அரசுகளின் அனுமதி பெற்ற தொழிற்பயிற்சி நிலையங்களில் தொழிற்பயிற்சி முடித்து இருக்க வேண்டும்.
நிபந்தனைகள்:
இதில் பயன்பெற சில நிபந்தனைகளும் உள்ளன. அவற்றில்,
1. விண்ணப்பதாரர் தொடங்க போகும் தொழிலை அவரே தேர்வு செய்யலாம்.
2.தொழில் மூலம் உருவாக்கப்படும் சொத்து விண்ணப்பதாரர் பெயரில் இருக்க வேண்டும்.
3. மானியம் பெற்ற மாவட்டத்திலே தொழில் தொடங்க வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
மாவட்ட தாட்கோ அலுவலகத்திற்கு நேரில் சென்று விண்ணப்பம் பெற்று விண்ணப்பிக்கலாம் அல்லது www.tahdco.com என்ற வலைத்தளத்தில் சென்று விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பின்பு அதை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment