தமிழகத்தில் நகராட்சி நிர்வாகத்துறை காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2455ஆக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
காலிப்பணியிடங்கள்
தமிழகத்தில் உதவி பொறியாளர், இளநிலை பொறியாளர், நகர திட்டமிடல் அலுவலர், தொழில்நுட்ப உதவியாளர், வரைவாளர், மேற்பார்வையாளர், பணி ஆய்வாளர், சுகாதார ஆய்வாளர் ஆகிய பதவிகளில் காலியாக உள்ள 1933 காலிப்பணியிடங்களை நேரடியாக நிரப்ப பிப்.2 ஆம் தேதி நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அறிவிப்பு வெளியிட்டது. இந்த காலிப்பணியிடங்கள் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், தமிழ்நாடு குடிநீர்மற்றும் கழிவுநீரகற்று வாரியம், சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வாரியம் போன்ற துறைகளில் இருக்கின்றன.இந்நிலையில் மொத்த காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 1933ல் இருந்து 2104 ஆக உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை 2455 ஆக உயர்த்தப்பட்டு இருப்பதாக நகராட்சி நிர்வாகத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட இருக்கிறது. எழுத்து தேர்வானது ஜூன் 29, 30 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. விண்ணப்பங்களை அனுப்ப மார்ச் 12 ஆம் தேதி கடைசி நாள் ஆகும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment