சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதிக்கு 25 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க! - Agri Info

Education News, Employment News in tamil

March 1, 2024

சுகாதாரத் துறை வேலை வாய்ப்பு; டிப்ளமோ தகுதிக்கு 25 பணியிடங்கள்; உடனே விண்ணப்பிங்க!

 திருவண்ணாமலை மாவட்ட சுகாதாரத் துறையில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 25 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.03.2024க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Staff Nurses/ MLHP

காலியிடங்களின் எண்ணிக்கை : 25

கல்வித் தகுதி : Diploma in GNM/BSc (Nursing) படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 50 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: ரூ. 18,000

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022135.pdf என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து, பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

முகவரி: கௌரவச் செயலாளர்/ துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், மாவட்ட நலவாழ்வுச் சங்கம், துணை சுகாதாரப் பணிகள் அலுவலகம், பழைய அரசு மருத்துவமனை வளாகம், செங்கம் சாலை, திருவண்ணாமலை

விண்ணப்பிக்க கடைசி தேதி : 06.03.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய என்ற https://cdn.s3waas.gov.in/s318997733ec258a9fcaf239cc55d53363/uploads/2024/02/2024022176.pdf இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.


No comments:

Post a Comment