சென்னை: குரூப் 4 போட்டித் தேர்வில் வெற்றி பெறுவதற்கான ஆலோசனைகளின் தொகுப்பான ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு - குரூப் 4' எனும் வழிகாட்டி நூல் வெளியிடப்பட்டது.
‘இந்து தமிழ் திசை' நாளிதழ் சார்பில் இளைஞர்களுக்கு நல்லகருத்துகளை வழங்கும் விதமாகவும், சமூகத்தின் முக்கிய நிகழ்வுகளை பதிவு செய்யும் வகையிலும் பல்வேறு நூல்கள் தொடர்ந்து வெளியிடப்பட்டு வருகின்றன. அதன்படி குரூப் 4 தேர்வில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை வகுத்து தரும் ‘டிஎன்பிஎஸ்சி தேர்வு-குரூப் 4' எனும் நூல் நேற்று முன்தினம் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வெளியிடப்பட்டது. இந்த நூலை முன்னாள் தலைமைச் செயலர் வெ.இறையன்பு வெளியிட, எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பெற்றுக் கொண்டார்.இந்நூலை பொருத்தவரை தேர்வுக்கு எப்படி உழைக்க வேண்டும்,பொருள் தருக, இலக்கணக் குறிப்பு, விடைக்கேற்ற வினாபோன்ற பல்வேறு பகுதிகளைஎப்படி கையாள வேண்டும் என்பனஉட்பட குரூப் 4 தேர்வுக்கானஅனைத்து வழிகாட்டுதலும் இடம்பெற்றுள்ளன.
இதனை கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஆட்சிப் பேரவை உறுப்பினரும், எழுத்தாளருமான ஆதலையூர் சூரியகுமார் தொகுத்துள்ளார். மொத்தம் 700 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.500.
விற்பனையின் தொடக்கமாக 10 சதவீத சிறப்பு தள்ளுபடி மற்றும்தபால் செலவு இலவசம் எனும்சலுகை மார்ச் 10-ம் தேதி வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குள் புத்தகங்களை அஞ்சல்/கூரியர் மூலம் பெற KSL MEDIA LIMITED என்ற பெயரில் D.D, Money order அல்லது Cheque மூலமாக அனுப்ப வேண்டிய முகவரி: ‘இந்து தமிழ் திசை நாளிதழ்’, கஸ்தூரி மையம், 124, வாலாஜா சாலை, சென்னை - 600002. போன்: 044-35048001. நூலை ஆன்லைனில் பெற store.hindutamil.in/publications எனும் தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.
மேலும் விவரங்களுக்கு: 7401296562 / 7401329402 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
🔻🔻🔻
No comments:
Post a Comment