கன்னியாகுமரி மாவட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் மாவட்ட சுகாதார அலுவலகத்தில் காலியாக உள்ள Ayush Medical Officer, Multipurpose Worker, Programe Manager போன்ற பல்வேறு பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது கடந்த சில நாட்களுக்கு முன் வெளியிடப்பட்டது. இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க வழங்கப்பட்ட கால அவகாசம் நாளையுடன் (28.03.2024) முடிவடைய உள்ளது. எனவே இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
மாவட்ட சுகாதார அலுவலக வேலைவாய்ப்பு விவரங்கள்:
- கன்னியாகுமரி மாவட்ட சுகாதார அலுவலகத்தில் Ayush Medical Officer, Multipurpose Worker, Programe Manager, Pharmacist, Data Assistant, Ayush Consultant, Therapeutic Assistant, Programme cum Administritive Assistant, Pharmacists ஆகிய பணிகளுக்கென 11 பணியிடங்கள் காலியாக உள்ளது.
- இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு 12ம் வகுப்பு, BUMS, BAMS, BHMS, BSMS, SNYS, Diploma, Graduate Degree, B.Tech, BBA, B.Sc, BCA, MS ஆகிய படிப்புகளில் ஏதேனும் ஒன்றை முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது முதல் 59 வயதுக்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.
- இந்த மாவட்ட சுகாதார அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.12,000/- முதல் ரூ.40,000/- வரை மாத சம்பளமாக வழங்கப்படும்.
- இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
DHO விண்ணப்பிக்கும் வழிமுறை:
இந்த மாவட்ட சுகாதார அலுவலகம் சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும். 28.03.2024 அன்றுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
Download Notification PDF
🔻🔻🔻
0 Comments:
Post a Comment