தேனி மாவட்டத்தில் படிப்பு முடிந்தவுடன், தொழில் தொடங்கும் ஆர்வமுள்ள இளைஞர்கள் அரசு வழங்கும் கடன்களை பெற்று தொழில் தொடங்கலாம் எனவும் அதற்கு அதிகபட்சமாக வழங்கப்பட்டு வந்த மானிய தொகை தற்போது அதிகரிக்கப்பட்டு 75 லட்சம் வரை மானியம் வழங்கப்படும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
PMEGP திட்டம் :-
பிரதமரின் ரோஜ்கர் யோஜனா (PMRY) மற்றும் கிராமப்புற வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் ஆகிய இரண்டும் தனித்தனியாக செயல்பட்டு வந்தன. இரண்டு திட்டங்களையும் இணைத்து பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP) என்ற புதிய கடன் இணைக்கப்பட்ட மானியத் திட்டம் அறிமுகப்பட்டது . இந்தத் திட்டத்தில் கிராமப்புற மற்றும் நகர்ப்புறங்களில் நுண்ணிய நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் ஆகும்.
இந்த திட்டத்தின் மூலம் படித்த இளைஞர்களுக்கு தொழில் முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு, அவர்களின் வணிகத் திட்டங்களைத் தயாரிக்க உதவுவதுடன், புதிய உற்பத்தி மற்றும் சேவை முயற்சிகளை அமைப்பதற்காக நிதி நிறுவனங்களுடன் இணைவதற்கு உதவுவதாகும். இத்திட்டத்தின் பயனாளிகள் முதல் தலைமுறை தொழில்முனைவோராக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் 5 கோடி வரை கடன் பெறலாம். தொழில்முனைவோர் நிலத்தின் விலை, வாடகை/குத்தகை கட்டிடம், தொழில்நுட்ப அறிவு, பூர்வாங்க மற்றும் முன் செலவுகளைச் அவர்களை சந்திக்க வேண்டும்.
“வேலையில்லாத இளைஞர் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் மூலம் (UYEGP) சமூகத்தில், சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பலவீனமான பிரிவினரின் வேலையின்மை பிரச்சினைகளைத் தணிப்பதை நோக்கமாகக் கொண்டு, குறிப்பாக படித்தவர்கள் மற்றும் வேலையில்லாதவர்கள் மத்தியில் கடன் வாங்குவதன் மூலம் உற்பத்தி / சேவை / வணிக நிறுவனங்களை நிறுவுவதன் மூலம் சுயதொழில் செய்ய ஊக்குவிப்பதாகவும்.
மானியத் தொகை அதிகரிப்பு :-
தேனி மாவட்டத்தில், புதிய தொழில் துவங்க மானியத் தொகையாக ரூ.75 லட்சம் வரை கடன் பெறலாம் என தேனி மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் சார்பில் 21 முதல் 35 வயது வரையிலான பொதுப்பிரிவினரை சேர்ந்தவர்களும் , 21 முதல் 45 வயது வரையிலான சிறப்பு பிரிவினர், அதாவது எஸ்.சி.எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., பெண்கள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத்திறனாளிகள் சேவை மற்றும் உற்பத்தி தொழில்கள் துவங்க வங்கி கடனுதவி கோரி விண்ணப்பிக்கலாம் என மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர் முதல் தலைமுறை தொழில் முனைவோராகவும், பட்டம், பட்டயம், ஐ.டி.ஐ., தொழிற்கல்வி தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும் என்று வரையறை இருந்தது. ஆனால் தற்போது கல்வி தகுதியை அரசு குறைத்துள்ளது. இதன் மூலம் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்களும் இதில் பயன் பெறலாம். இதில் சக்கரம் அலைன்மென்ட், கிளினிக்கல் டெஸ்டிங், ஜிம், கோல்டு ஸ்டோரேஜ், கான்கிரீட் கலவை இயந்திரம், அரிசி ஆலை, பருப்பு மில், சமையல் எண்ணெய், ஆயத்த ஆடை தயாரிப்பு போன்ற தொழில்கள் துவங்கலாம்.
இத்திட்டத்தில் முதலில் அதிகபட்சமாக 50 லட்சம் மட்டுமே மானியமாக வழங்கப்பட்டது. தற்போது அதிகபட்ச முதலீட்டு மானியத் தொகையை ரூ.50 லட்சம் முதல் ரூ.75 லட்சமாக தமிழக அரசு உயர்த்தியுள்ளது. மேலும் கூடுதளாக வட்டி மானியமும் வழங்கப்படும் என அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரை ஊக்கவிக்க 10 சதவீத கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைப் பற்றிய கூடுதல் விபரங்களுக்கு https://www.msmeonline.tn.gov.in/நீட்ஸ் என்ற இணையதளத்தில் பார்வையிட்டு பயனடையலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment