மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான பெல் (BHEL) இந்தியா நிறுவனத்தில், 517 தொழிற்பயிற்சி பொறியாளர் (Trainee Engineer) பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம்
.மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினீயர் (Trainee Engineer) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 517 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழ்நாடு அடங்கிய தெற்கு மண்டலத்தில் 131 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 13.03.2024க்குள் விண்ணப்பிக்கலாம்.
Trainee Engineer காலியிடங்களின் எண்ணிக்கை: 517
கல்வித் தகுதி: B.E/B.Tech/M.E/M.Tech in Engineering (Electronics, / Electronics & Communication / Electronics & Telecommunication/ Telecommunication / Communication / Mechanical/ Electrical /Electrical & Electronics / Computer Science /Computer Science & Engineering / Information Science/ Information Technology) படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 01.02.2024 அன்று 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். M.E/M.Tech படித்தவர்கள் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம். இடஒதுக்கீட்டு பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வழக்கமான தளர்வு அளிக்கப்படும்.
அதன்படி, நிர்ணயிக்கப்பட்ட வயது வரம்பிற்கு மேல் பட்டியல் கண்ட சாதிகள்/ பட்டியல் கண்ட பழங்குடி வகுப்பினர் 5 ஆண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மூன்றாண்டு வரை வயது வரம்பு சலுகை பெற தகுதியுடைவர்கள். நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 10 ஆண்டு வரை சலுகை பெற தகுதியுடைவராவர்
தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.விண்ணப்பிக்க கடைசி தேதி: 13.03.2024
விண்ணப்பக் கட்டணம்: இதற்கான, விண்ணப்பக் கட்டணம் ரூ.150 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. ஆகவே, பொதுப் பிரிவு மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ரூ.150 விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: இதற்கான விண்ணப்பங்களை bel-india.in இணையதளம் மூலம் ஆன்லைனில் மட்டும் சமர்ப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி 13.03.2024 ஆகும். மேலும், முழுமையான விபரங்களை அறிய இந்த இணைப்பைக் கிளிக் செய்யவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment