சென்னை ராணுவ வாகன ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; 60 பணியிடங்கள்; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க! - Agri Info

Adding Green to your Life

March 31, 2024

சென்னை ராணுவ வாகன ஆராய்ச்சி நிறுவன வேலை வாய்ப்பு; 60 பணியிடங்கள்; ஐ.டி.ஐ படித்தவர்கள் விண்ணப்பிங்க!

 சென்னை ஆவடியில் உள்ள டி.ஆர்.டி.ஓ (DRDO) நிறுவனத்தில் ஐ.டி.ஐ (ITI) படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 60 காலியிடங்கள் நிரப்பட உள்ளன. தகுதியுள்ளவர்கள் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.


சென்னை ஆவடியில் செயல்பட்டு வரும், இந்திய அரசின் பாதுகாப்பு துறையின் கீழ் செயல்பட்டு வரும் டி.ஆர்.டி.ஓ நிறுவனத்தின் ஒரு 

அங்கமான ராணுவ வாகன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு 

நிறுவனத்தில் (CVRDE) தொழில் பழகுநர் பணியிடங்களுக்கான 

அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பயிற்சி பணியிடங்களுக்கு 

விண்ணப்பிக்க கடைசி தேதி 18.04.2024

காலியிடங்களின் விவரம்

Carpenter – 2

COPA - 8

Draughtsman (Mechanical) – 4

Electrician – 6

Electronics - 4

Fitter – 15

Machinist – 10

Mechanic (Motor Vehicle) – 3

Turner – 5

Welder – 3

கல்வி தகுதி: இந்த பயிற்சி இடங்களுக்கு அந்தந்த பிரிவில் ஐ.டி.ஐ முடித்திருக்க வேண்டும். 

ஊக்கத்தொகை : COPA, Carpenter, Welder பிரிவுகளுக்கு ரூ. 7700

பிற பிரிவுகளுக்கு : ரூ. 8050

வயது தகுதி: 18 வயது முதல் 27 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். OBC பிரிவினர் 30 வயது வரையிலும், 

SC/ST பிரிவினர் 32 வயது வரையிலும், PWD பிரிவினர் 37 வயது 

வரையிலும் விண்ணப்பிக்கலாம்.

தேர்வு செய்யப்படும் முறை : அந்தந்த கல்வித் தகுதி படிப்பில் 

பெற்ற மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://drdo.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 

விண்ணப்பிக்க கடைசி தேதி : 18.04.2024

மேலும் விவரங்களுக்கு 

https://www.drdo.gov.in/drdo/sites/default/files/career-vacancy-documents/advtcvrdeApp28032024.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment