சென்னையில் உள்ள மத்திய அரசின் கல்வி நிறுவனமான இந்திய தொழில்நுட்ப கழகத்தில் (ஐ.ஐ.டி – IIT Madras) இளநிலை உதவியாளர், ஓட்டுனர், பாதுகாவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 64 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 12.03.2024
Chief Security Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 15 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 50 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Assistant Registrar
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 8 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Sports Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 1
கல்வித் தகுதி: Master’s degree in Physical
education/ Sports Science படித்திருக்க வேண்டும். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 45 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Junior Superintendent
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: Bachelor’s degree in Arts/Science or
Humanities including Commerce படித்திருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Assistant Security Officer
காலியிடங்களின் எண்ணிக்கை: 4
கல்வித் தகுதி: இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 6 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Physical Training Instructor
காலியிடங்களின் எண்ணிக்கை: 3
கல்வித் தகுதி: Bachelor of Physical Education
(B.P.Ed) படித்திருக்க வேண்டும். 3 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
வயதுத் தகுதி: 32 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Junior Assistant
காலியிடங்களின் எண்ணிக்கை: 30
கல்வித் தகுதி: Bachelor’s degree in Arts/Science or
Humanities including Commerce படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Cook
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: B.Sc in Hotel Management &
Catering Technology or Three-year Diploma in Hotel Management & Catering
Technology படித்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Driver
காலியிடங்களின் எண்ணிக்கை: 2
கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கனரக வாகன ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
Security Guard
காலியிடங்களின் எண்ணிக்கை: 10
கல்வித் தகுதி: 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயதுத் தகுதி: 27 வயதிற்குள் இருக்க வேண்டும்.
வயது வரம்பு தளர்வு: மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை : இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு, திறனறித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://icandsr.iitm.ac.in/recruitment/ என்ற இணையதளப் பக்கத்திற்குச் சென்று ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க கடைசி தேதி : 12.03.2024
இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://recruit.iitm.ac.in/include/R124_Detailed_Advt.pdf என்ற இணையதளப் பக்கத்தைப் பார்வையிடவும்.
🔻🔻🔻
No comments:
Post a Comment