சமையலறை நமது ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பை கொண்டுள்ளது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமானால் சமையலறை என்பது நமது ஆரோக்கியத்தின் பிரதிபலிப்பாகவே அமைகிறது. சமையலறையில் நாம் வைத்திருக்கக்கூடிய ஒவ்வொரு பொருளுமே நமது ஆரோக்கியத்தில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நம்மை அறியாமலேயே சமையலறையில் நாம் பயன்படுத்தும் சில பொதுவான பொருட்கள் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது என்று சொன்னால் நம்புவீர்களா? ஆம், உண்மைதான். அது என்னென்ன பொருட்கள் என்பதை இப்பொழுது தெரிந்து கொள்ளலாம். இதன் மூலமாக நீங்கள் விழிப்புடன் இருந்து உங்களை புற்றுநோயிலிருந்து பாதுகாக்கலாம்.
நான் ஸ்டிக் குக்வேர் : தற்போது சமைப்பதற்கு பயன்படும் நான் ஸ்டிக் பொருட்கள் பெரும்பாலான சமையலறைகளில் பிரதானமாக காணப்படுகிறது. ஆனால் நான்ஸ்டிக் கோட்டிங்கை உருவாக்குவதற்கு பயன்படுத்தப்படும் பெர்ஃபுளோரோஆக்டநோயிக் அமிலமானது (PFOA) புற்று நோயுடன் தொடர்புடையது என சமீபத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சமைக்கும் பொழுது அதிகப்படியான வெப்பநிலைக்கு நான் ஸ்டிக் பொருட்கள் வெளிப்படுத்தப்படுகின்றன. அதில் இருந்து வெளிவரக்கூடிய புகையானது புற்றுநோய் வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.
பிளாஸ்டிக் பொருட்கள் : பல சமையலறைகளில் எங்கு பார்த்தாலும் தற்போது பிளாஸ்டிக் பொருட்கள் தான் நிறைந்து இருக்கிறது. பிளாஸ்டிக் பாட்டில்கள் மற்றும் கண்டைனர்களை உற்பத்தி செய்ய பயன்படுத்தப்படும் பிஸ்பினால்A (BPA) என்ற கெமிக்கல் ஹார்மோன் சீர்குலைவை ஏற்படுத்தி, நமது நோய் எதிர்ப்பு சக்தியை சமரசம் செய்கிறது. எனவே ஆரோக்கியம் கருதி முடிந்த அளவு பிளாஸ்டிக் பொருட்களை தவிர்ப்பது நல்லது.
சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை : இனிப்புக்காக பயன்படுத்தப்படும் சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரை புற்றுநோய் வளர்ச்சியை ஊக்குவிக்க கூடியதாக அமைகிறது. சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரையை அதிகப்படியாக சாப்பிடுவது நமது உடலில் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரிக்கும் என்று ஆய்வில் நிரூபிக்கப்பட்டுள்ளது.
பதப்படுத்தப்பட்ட இறைச்சி : பதப்படுத்தப்பட்ட இறைச்சி புற்றுநோய் அபாயத்தை அதிகரிக்கலாம் குறிப்பாக கோலோரெக்டல் புற்றுநோய் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை சாப்பிடுவதால் ஏற்படுகிறது. இறைச்சிகளை பதப்படுத்துவதற்கு பயன்படுத்தப்படும் நைட்ரேட்டுகள் மற்றும் நைட்ரைட்கள் நமது உடலில் நைட்ரோசமைன்களாக மாற்றமடைகின்றன. இந்த காம்பவுண்டுகள் காரணமாக புற்றுநோய் உருவாகிறது.
பதப்படுத்தப்பட்ட உணவுகள் (கேன்டு ஃபுட்) : கேன்களில் அடைத்து வரக்கூடிய உணவுகள் நமக்கு சௌகரியத்தை வழங்கினாலும் அவற்றில் இருக்கக்கூடிய பிஸ்பினால்A (BPA) காரணமாக அது புற்றுநோய் உண்டாக்கும் ஒரு ஏஜெண்டாக செயல்படுகிறது. கேன்களின் ஓரங்களில் அமைந்திருக்கக் கூடிய BPA உணவுகளில் கலப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. குறிப்பாக கேன்களை நாம் சூடேற்றினாலோ அல்லது அவை அமிலம் நிறைந்த உணவுப் பொருட்களோடு தொடர்பு கொண்டாலோ BPA நிச்சயமாக உணவுடன் கலக்கலாம். இந்த கெமிக்கல் புற்றுநோயை ஏற்படுத்தக் கூடியதாக அமைகிறது.
அலுமினியம் ஃபாயில் : தற்போது பல்வேறு விதமான சமையலுக்கு அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தப்படுகின்றன. ஆனால் அலுமினியம் ஃபாயில் பயன்படுத்தி அமிலத்தன்மை நிறைந்த பொருட்களை சமைத்தாலோ அல்லது அவற்றை அலுமினியம் ஃபாயிலில் சேமித்து வைத்தாலோ குறிப்பிடத்தக்க அலுமினியம் உணவில் கலப்பதற்கு வாய்ப்பு உள்ளது. இதை நமது உடலில் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தலாம். நீண்ட நாட்களுக்கு இவ்வாறு நமது உடலில் அலுமினியம் சேமிக்கப்படும் பொழுது அது புற்றுநோயை உண்டாக்கும்.
0 Comments:
Post a Comment