எல்லைப் பாதுகாப்புப் படையில் 80+ காலியிடங்கள் – Diploma / ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்! - Agri Info

Adding Green to your Life

March 13, 2024

எல்லைப் பாதுகாப்புப் படையில் 80+ காலியிடங்கள் – Diploma / ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!

 உள்துறை அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எல்லைப் பாதுகாப்புப் படையில் (BSF) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் Group A / B / C பிரிவுகளின் கீழ்வரும் Assistant Aircraft Mechanic, Assistant Radio Mechanic, Constable, SI, HC ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கென மொத்தமாக 82 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் உடனே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.எல்லைப் பாதுகாப்புப் படை காலியிடங்கள்:

BSF Air Wing (Group A):

  • Assistant Aircraft Mechanic (Assistant Sub Inspector) – 08 பணியிடங்கள்
  • Assistant Radio Mechanic (Assistant Sub Inspector) – 11 பணியிடங்கள்
  • Constable (Storeman) – 03 பணியிடங்கள்

BSF Engineering (Group B):

  • SI (Works) – 13 பணியிடங்கள்
  • SI / JE (Elect) – 09 பணியிடங்கள்

BSF Engineering (Group C):

  • HC (Plumber) – 01 பணியிடம்
  • HC (Carpenter) – 01 பணியிடம்
  • Constable (Generator Operator) – 13 பணியிடங்கள்
  • Constable (Generator Mechanic) – 14 பணியிடங்கள்
  • Constable (Lineman) -09 பணியிடங்கள்

BSF கல்வி:

இந்த BSF சார்ந்த பணிகளுக்கு அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி வாரியங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் 10ம் வகுப்பு, Diploma, ITI தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க இயலும்.


BSF வயது:

15.04.2024 அன்றைய தினத்தின் படி, விண்ணப்பதாரர்கள் பின்வரும் வயது வரம்பிற்குள் உள்ளவராக இருக்க வேண்டும்.

  • Assistant Aircraft Mechanic (Assistant Sub Inspector) – அதிகபட்சம் 28 வயது
  • Assistant Radio Mechanic (Assistant Sub Inspector) – அதிகபட்சம் 28 வயது
  • Constable – 18 வயது முதல் 25 வயது வரை
  • Sub Inspector – அதிகபட்சம் 30 வயது
  • SI / JE – அதிகபட்சம் 28 வயது
  • Head Constable – 18 வயது முதல் 25 வயது வரை

BSF மாத ஊதியம்:

இப்பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்கள் பணியமர்த்தப்படும் பதவிக்கு ஏற்ப ரூ.21,700/- முதல் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.

BSF தேர்வு செய்யும் விதம்:

எழுத்து தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு, உடற்தகுதி தேர்வு ஆகிய தேர்வு முறைகளின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.

BSF விண்ணப்பிக்கும் விதம்:

இந்த எல்லைப் பாதுகாப்புப் படை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் https://rectt.bsf.gov.in/ என்ற இணைப்பில் இப்பணிகளுக்கென கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். 15.04.2024 என்பது இப்பணிகளுக்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆகும்.

Download Notification Link



🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

No comments:

Post a Comment