ரமலான் என்பது உலகெங்கிலும் வாழுகின்ற முஸ்லிம் மக்களால் கடைப்பிடிக்கப்படும் புனித மாதம் ஆகும். சூரிய உதயத்திற்கு முன்னால் நோன்பு வைத்து, அதனை சூரிய அஸ்தமன நேரத்தில் முடித்துக் கொள்கின்றனர். ரமலான் மாதத்தில் ஒவ்வொரு நாளும் இறைவனை நினைத்து தினசரி இஸ்லாமியர்கள் சிறப்புத் தொழுகைகளை மேற்கொள்வர்.
நோன்பு இருக்கும் சமயத்தில் எந்தவித உணவும் சாப்பிடாமலும், தண்ணீர் அருந்தாமலும், உமிழ் நீரை விழுங்காமலும் விரதம் இருக்கின்றனர். இதனை மாலைப் பொழுதில் முடித்துக் கொள்ளும்போது இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்ளும் உணவுகளில் பேரீட்சை மிக முக்கிய இடத்தைப் பிடிக்கிறது
பாரம்பரிய முறைப்படி பேரீட்சை எடுத்துக் கொள்வது ஒரு வழக்கமாக இருக்கிறது. அதையும் தாண்டி இது ஆழமான ஆன்மீக தொடர்புகளைக் கொண்டிருக்கிறது. மேலும், எண்ணற்ற ஊட்டச்சத்துக்களை பேரீட்சை கொண்டிருப்பதால் அன்றைய நாளின் விரதத்தை முடிக்கும்போது இது நல்லதொரு உணவாக அமைகிறது.
வரலாறு மற்றும் ஆன்மீக முக்கியத்துவம் : பேரீட்சையுடன் நோன்பை முடித்துக் கொள்ளும் வழக்கம், இறை தூதரான முகமது நபிகள் காலத்தில் இருந்தே கடைப்பிடிக்கப்படுகிறது. அராபிய பாரம்பிய முறைப்படி, பேரீட்சை மற்றும் தண்ணீர் ஆகியவற்றை எடுத்துக் கொண்டு நபிகள் நாயகம் நோன்பை முடித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருந்தாராம். நோன்பு வைக்கும் முன்பாகவும், நோன்பு திறந்த பிறகும் இதுபோன்ற பழக்கம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது என்பதற்கு இஸ்லாமிய மதத்தின் போதனை நூல்கள் பலவற்றில் எடுத்துக்காட்டு உள்ளது.
ஊட்டச்சத்துக்கள் : ஆன்மீக நம்பிக்கை ஒருபக்கம் இருக்க, பேரீட்சையில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன என்பதும் இதனை மக்கள் விரும்பி சாப்பிட ஒரு காரணம் ஆகும்.
இயற்கையான இனிப்பு : விரதம் முடித்த கையோடு பேரீட்சை சாப்பிடுவதால் உடலுக்கு துரிதமான ஆற்றல் கிடைக்கிறது. பேரீட்சையில் குளுகோஸ், ஃப்ரக்டோஸ், சுக்ரோஸ் போன்ற இயற்கையான இனிப்புகள் இருக்கின்றன. இது ரத்த சர்க்கரையை துரிதமாக அதிகரித்து உடலுக்கு ஆற்றல் வழங்கும்.
நிறைவான ஊட்டச்சத்துக்கள் : நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் விட்டமின் சத்துக்கள் பேரீட்சையில் உள்ளன. நீண்ட நேரம் நோன்பு இருந்து சோர்வு அடையும் மக்களுக்கு இது உடனடி ஆற்றல் கொடுக்கும்.
நீர்ச்சத்து : பேரீட்சை பழங்களில் நீர்ச்சத்து மிகுதியாக உள்ளது. அது நம் உடல் இயக்கத்திற்கு தேவையான நீர்ச்சத்து தேவையை பூர்த்தி செய்யும்.
வயிற்றுக்கு நல்லது : பேரீட்சை மிக எளிமையாக ஜீரணம் ஆகக் கூடியது. நோன்பை முடித்துக் கொண்ட பிறகு எளிமையாக ஜீரணம் ஆகக் கூடிய உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்ற சுழலில், இது நல்லதொரு தேர்வாக அமையும்.
செரிமான ஆரோக்கியம்: பேரீட்சையில் நார்ச்சத்து மிகுதியாக இருப்பதால் செரிமான ஆரோக்கியம் மேம்படும் மற்றும் மலச்சிக்கல் ஏற்படாது.
🔻 🔻 🔻
No comments:
Post a Comment