கனராவங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பாக பெண்களுக்கான இலவச தையற்கலை பயிற்சி வருகின்ற 20-03-2024முதல் 27-04-2024வரை 30நாட்கள் நடைபெற உள்ளது. இப்பயிற்சியின்போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக பயிற்சியாளர்களுக்கு வழங்கப்படும்.
பெண்களின் முன்னேற்றத்தை மேம்படுத்தவும் மற்றும் சுய தொழில் முனைவோராக பெண்களை சமுதாயத்தில் உயர்த்தி காட்டும் முனைப்போடு இந்த தொழில்பயிற்சி வழங்கப்படுகிறது. பயிற்சியின் முடிவில் அரசு அங்கிகாரத்துடன் சான்றிதழ் வழங்கப்படும்.
ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். 18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள். வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம்.
இப்பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு அவசியம். முன்பதிவு செய்வதற்கு 8778323213, 7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளலாம் அல்லது கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம், பைபாஸ் ரோடு, ஈரோடு- 638002 என்ற முகவரிக்கு நேரில் சென்று முன்பதிவு செய்து கொள்ளலாம்.
🔻🔻🔻
No comments:
Post a Comment