Project Associate பணிக்கென சென்னைப் பல்கலைக்கழகத்தில் (Madras University) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களுக்கு ரூ.31,000/- மாத ஊதியமாக வழங்கப்படும். இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் இறுதி நாளுக்குள் விண்ணப்பித்து பயன் பெறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
Madras University காலியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பின் படி, Project Associate பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே சென்னைப் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ளது.
Project Associate கல்வி:
Analytical Chemistry, General Chemistry பாடப்பிரிவில் M.Sc டிகிரியை அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி / கல்வி நிறுவனங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் இப்பணிக்கென பெறப்பட்டு வருகிறது.
Project Associate வயது:
இப்பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 35 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
Project Associate மாத ஊதியம்:
Project Associate பணிக்கு தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் ரூ.25,000/- முதல் ரூ.31,000/- வரை மாத ஊதியமாக பெறுவார்கள்.
Madras University தேர்வு செய்யும் விதம்:
இந்த சென்னைப் பல்கலைக்கழக பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
Madras University விண்ணப்பிக்கும் விதம்:
இப்பணிக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு 31.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
Download Notification & Application Form PDF
🔻🔻🔻
No comments:
Post a Comment