தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் பிரபல ஐடி நிறுவனத்தின் உள்கட்டமைப்பு மேம்பாட்டு பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது
ஐடி நிறுவனம்
சென்னை பெங்களூர் போன்ற முக்கிய நகரங்கள் மட்டுமல்லாமல் தென் தமிழகத்தில் மதுரையிலும் ஐடி நிறுவனங்கள் மேம்பாட்டிற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில் பெங்களூரை தலைமை இடமாகக் கொண்டு உலகம் முழுவதும் மக்கள் வர்த்தகம் செய்யும் ஐடி சேவை நிறுவனமான Happiest minds நிறுவனம் மதுரையில் தன்னுடைய கிளையை மேம்படுத்த இருக்கிறது.
இந்த நிறுவனம் மதுரையில் தயா சைபர் பார்க்கில் புதிய டெவலப்மெண்ட் சென்டரை திறந்துள்ளது. இந்த புதிய டெவலப்மெண்ட் சென்டரில் 250 பேரை பணியில் அமர்ந்த திட்டமிட்டுள்ளது. இதில் ஏற்கனவே 550 ஊழியர்கள் பணிபுரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. தென் மாவட்டத்தில் இவ்வளவு பெரிய ஐடி நிறுவனம் மேம்படுவது இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
🔻🔻🔻
No comments:
Post a Comment