வேலூர்: டிப்ளமோ படித்தவர்களுக்கு விஐடியில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது என வேந்தர் கோ.விசுவநாதன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘விஐடி பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு துறையும், இயந்திரவியல் துறையும் இணைந்து மார்ச் 7-ம் தேதி ( வியாழக் கிழமை ) காலை 10 மணிக்கு விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடியில் அறை எண் 717-ல் டிப்ளமோ முடித்தவர்களுக்கு வளாக நேர்முகத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்த தேர்வில் கலந்து கொள்ள கல்லூரியில் டிப்ளமோ இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருக்கும் மாணவ, மாணவிகள் மற்றும் டிப்ளமோ, பட்டயப்படிப்பு முடித்தவர்கள் கலந்து கொள்ளலாம்.வளாக நேர்முகத் தேர்வுக்கு இந்தியாவின் சிறந்த நிறுவனங்களான ஸ்டீல் 1 இந்தியா, டிவிஎஸ் ட்ரைனிங் அண்ட் சர்வீஸ், பியோ நீர் எக்ஸ் எனர்ஜி, ரிலையன்ஸ் டிஜிட்டல், அல்ட்ராடெக் சிமென்ட், ராஜஸ்ரீ குரூப்ஸ், எமரால்ட் ஜூவல்லரி, முபீஸ் இந்தியா, எஸ். ராஜகோபால் கோ, எஃஸ்சிஎம்ஜி, சால்காம்ப் இந்தியா, டிவிஎஸ் அண்ட் எலெக்ட்ரானிக்ஸ், விஸ்டியான், கார்போரண்டம், பிரேக்ஸ் இந்தியா, ஸ்விங் ஸ்டெட்டர், கோஸ்டல், பி அண்ட் பி உட்பட 20-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்து கொள்கின்றன.
இதற்கான நுழைவு சீட்டினை தாங்கள் பயிலும் கல்லூரி முதல்வரிடம் பெற்றுக் கொள்ளலாம். டிப்ளமோ படித்து முடித்தவர்கள், விஐடியில் உள்ள சில்வர் ஜூப்ளி டவர் 7-வது மாடி, அறை எண் 717-ல் வரும் மார்ச் 5-ம் தேதிக்குள் அனைத்து வேலை நாட்களிலும் நேரில் வந்து பெற்றுக் கொள்ளலாம். இந்த நேர்முகத் தேர்வுக்கு வருவோர் தங்களது சுயவிவரம், கல்வி சான்றிதழ்கள், ஆதார் அட்டை, புகைப்படம் ஆகிய வற்றை எடுத்து வர வேண்டும்.
இதில், வேலூர் மாவட்டம் மற்றும் அதன் அருகில் உள்ள மாவட்டத்தைச் சேர்ந்த டிப்ளமோ படித்தவர்கள் கலந்து கொள்ளலாம். இதில், கலந்து கொள்ள எந்தவித கட்டணமும் செலுத்த தேவையில்லை, டிப்ளமோ படித்தவர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு வேலைவாய்ப்பினை பெற்று பயன்பெறலாம்’’ என தெரிவித்துள்ளார்.
🔻🔻🔻
No comments:
Post a Comment