செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ஆணையின் படி, புழல் பெண்கள் தனிச்சிறையில் மதிப்பூதியத்தின் அடிப்படையில் ஒரு மனநல பெண் அறிவுரையாளர் (counsellor) பணியிடம் காலியாக உள்ளது. இந்த காலியிடங்களை நிரப்பும் பொருட்டு ஆணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் கீழ்கண்ட தகுதிகளை பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுருத்தப்படுகிறார்கள். இந்த counsellor பணியிடத்திற்கான கல்வித்தகுதி Master degree in sociology அல்லது psychology ல் தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
இதற்கான அனுபவம் counsell experience in mental health institutions or community service என்று குறிப்பிட்டுள்ளனர். இட ஒதுக்கீட்டை பொருத்தவரையில் (General turn -women)ஆகும். இந்த counsellor பணிக்கான வயது வரம்பு 01.07.2023 அன்றுடன் குறைந்த பட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்களாக இருக்க வேண்டும்.
SCA,SC,ST பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு 35 வயது ஆகும். BC ,MBC பிரிவினருக்கு அதிக பட்ச வயது வரம்பு,32 வயது ஆகும். OC பிரிவினருக்கு அதிகபட்ச வயது வரம்பு -30 வயது ஆகும். இந்த பணியிடத்திற்கான ஊதியத்தொகை ரூ 25,000 (Honorarium) (மதிப்பூதியம்)ஆகும்.
தகுதியுள்ள விருப்பமுள்ள நபர்கள் மட்டும் கீழ்கண்ட முகவரிக்கு கீழ்க்காணும் ஆவணங்களின் நகல்களுடன் 12.03.2024 ம் தேதிக்குள் அனுப்பி விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். விண்ணப்பத்துடன் அனுப்ப வேண்டிய ஆவணங்கள்:
1. சாதிச் சான்றிதழ்
2. குடும்ப அட்டை
3. முன்னுரிமை பெற்றதற்கான சான்றிதழ்
4. பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஒன்று
5. கல்விச் சான்றிதழ்
6. ஆதார் அட்டை
7. முன் அனுபவச் சான்று
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
சிறை கண்காணிப்பாளர்
பெண்கள் தனிச்சிறை
புழல்,சென்னை -66.
இந்த பணிக்கு விண்ணப்பிக்க 12.03.2024கடைசி நாளாகும்.
No comments:
Post a Comment