ஈரோடு பெண்களுக்கு இலவச அழகு கலை தொழிற்பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது ? - Agri Info

Adding Green to your Life

March 8, 2024

ஈரோடு பெண்களுக்கு இலவச அழகு கலை தொழிற்பயிற்சி..எப்படி விண்ணப்பிப்பது ?

 கனரா வங்கி கிராமப்புற சுயவேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தின் சார்பில் பெண்களுக்கான இலவச அழகுக்கலை (Free Beauty Parlour) பயிற்சி வருகின்ற 15-03-2024 முதல் 22-04-2024 வரை 30 நாட்கள் நடைபெற உள்ளது.

இப்பயிற்சியின் போது சீருடை, உணவு உட்பட அனைத்தும் இலவசமாக வழங்கப்படும். பயிற்சியின் முடிவில் அரசு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

18 வயதிற்கு மேல் 45 வயதிற்கு உட்பட்டவர்கள் மட்டும் பயிற்சியில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.


🔻🔻🔻

Click here to join Group4 whatsapp group

Click here to join WhatsApp group for Daily employment news

வறுமை கோட்டிற்கு கீழ் வாழ்பவர்கள் அல்லது நூறு நாள் வேலைத் திட்டத்தில் இருப்பவர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களும் இப்பயிற்சியில் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள முன்பதிவு கட்டாயம் ஆகும். முன்பதிவு செய்ய 8778323213,  7200650604, 0424-2400338 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பதிவு செய்து கொள்ளலாம்.

கனரா வங்கி கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம், ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம் 2-ம் தளம், கொல்லம்பாளையம் பைபாஸ் ரோடு, ஈரோடு - 638002 என்ற முகவரியில் பயிற்சி வகுப்புகள் நடைபெற உள்ளது.


No comments:

Post a Comment