Project Fellow பணிக்கென பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் (Bharathidasan University) ஏற்பட்டுள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அறிவிப்பானது தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் இப்பொழுதே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.பல்கலைக்கழக காலியிடங்கள்:
பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Fellow பணிக்கென ஒரே ஒரு (01) பணியிடம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது.
Project Fellow கல்வி:
Chemistry பாடப்பிரிவில் M.Sc, M.Phil டிகிரியை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / பல்கலைக்கழகங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.
Project Fellow வயது:
Project Fellow பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 28 வயதுக்கு கீழுள்ளவராக இருக்க வேண்டும்.
Project Fellow மாத சம்பளம்:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்களுக்கு ரூ.14,000/- மாத சம்பளமாக வழங்கப்படும்.
Bharathidasan University தேர்வு செய்யும் விதம்:
இந்த பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்ந்த பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் Interview மூலம் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
Bharathidasan University விண்ணப்பிக்கும் விதம்:
Project Fellow பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான ஆவணங்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு மற்றும் ilangovan@bdu.ac.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு 19.03.2024 அன்றுக்குள் அனுப்ப வேண்டும்.
No comments:
Post a Comment