Bank of Baroda வங்கியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப வேண்டி அதற்கான அறிவிப்பானது புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதில் BC Supervisor, Office Assistant , Watchman / Gardner, FLCC Counsellor ஆகிய பணியிடங்கள் காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியான நபர்களின் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள நபர்கள் இக்கணமே விண்ணப்பித்து பயன் அடையுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
BOB Bank காலியிடங்கள்:
Bank of Baroda வங்கியில் பின்வரும் பணியிடங்கள் காலியாக உள்ளது.
BC Supervisor – 06 பணியிடங்கள்
Office Assistant – 01 பணியிடம்
Watchman / Gardner – 01 பணியிடம்
FLCC Counsellor – 01 பணியிடம்
BOB Bank கல்வி தகுதி:
இந்த வங்கி துறை சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.
BC Supervisor – Graduate Degree, M.Sc, MCA, MBA, BE
Office Assistant – Graduate Degree (BSW / BA / B.Com / B.SC / BBA)
Watchman / Gardner – 07ம் வகுப்பு
FLCC Counsellor – Graduate Degree
BOB Bank வயது வரம்பு:
BC Supervisor பணிக்கு 21 வயது முதல் 45 வயது வரை என்றும்,
Watchman / Gardner பணிக்கு 20 வயது முதல் 40 வயது வரை என்றும்,
FLCC Counsellor பணிக்கு 20 வயது முதல் 40 வயது வரை என்றும் வயது வரம்பானது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
BOB Bank மாத ஊதியம்:
BC Supervisor பணிக்கு ரூ.25,000/- எனவும்,
Office Assistant பணிக்கு ரூ.14,000/- எனவும்,
Watchman / Gardner பணிக்கு ரூ.8,500/- எனவும்,
FLCC Counsellor பணிக்கு ரூ.23,000/- எனவும் மாத ஊதியமாக வழங்கப்படும்.
BOB Bank தேர்வு செய்யும் விதம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Written Test, Interview, Documentation / Presentation ஆகிய தேர்வு முறைகளின் படி தேர்வு செய்யப்படுவார்கள்.
BOB Bank விண்ணப்பிக்கும் விதம்:
இந்த BOB வங்கி சார்ந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆவலுடன் உள்ள நபர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் தரப்பட்டுள்ள முகவரிக்கு இறுதி நாளுக்குள் அனுப்ப வேண்டும்.
BC Supervisor – 15.03.2024
மற்ற நபர்கள் – 14.03.2024
🔻🔻🔻
No comments:
Post a Comment